sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

39 ஆயிரம் பணியிடங்கள் காலி; 'ஷாக்' கொடுத்த மின்வாரியம்

/

39 ஆயிரம் பணியிடங்கள் காலி; 'ஷாக்' கொடுத்த மின்வாரியம்

39 ஆயிரம் பணியிடங்கள் காலி; 'ஷாக்' கொடுத்த மின்வாரியம்

39 ஆயிரம் பணியிடங்கள் காலி; 'ஷாக்' கொடுத்த மின்வாரியம்

3


ADDED : பிப் 09, 2025 05:12 AM

Google News

ADDED : பிப் 09, 2025 05:12 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழக மின்வாரியத்தில் ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கும் வகையில் 39 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மதுரையைச் சேர்ந்தவர் மோகன். மின் பிரச்னை காரணமாக மின்வாரியத்தை தொடர்பு கொண்டார். ஒப்பந்த ஊழியர்கள் அரைகுறையாக சரிசெய்ததால் மோட்டார் பழுது ஏற்பட்டது. இதனால் 'ஷாக்' ஆனவர், ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்யும் அளவிற்கு மின்வாரியத்தில் ஆள்பற்றாக்குறையா என விசாரிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அனுப்பினார்.

சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து அவருக்கு அனுப்பிய பதிலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகிர்மான அலுவலகங்களிலும் களப்பணியாளர்களாகப் பணி புரியும் கேங்மேன் பணியில் 626 பணியிடங்களும், கள உதவியாளர் பணியில் 25 ஆயிரத்து 551 பணியிடங்களும், ஒயர்மேன் பணியில் 13 ஆயிரத்து 216 பணியிடங்கள் என மொத்தம் 39 ஆயிரத்து 393 பணியிடங்கள் காலியாக உள்ளன, என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நமது நிருபரிடம் மோகன் கூறியதாவது:


போதுமான அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டாலே மின் வாரியம் தொடர்பான பொது மக்கள் பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிடும்.

தவிர மின் வாரியத்திற்கு தொடர்பற்ற நபர்கள்மின் கம்பங்களில் ஏறி பழுது நீக்கி பொது மக்களிடம் பணம் பெறுவதும், உயிர் சேதங்களும், லஞ்சமும் தடுக்கப்படும். உடனடியாக தமிழக அரசு அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்பி, மின் வாரிய ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க முன் வர வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us