தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ திரிபுரா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பழங்குடியின குழுக்கள் ஆதரவு

திரிபுரா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பழங்குடியின குழுக்கள் ஆதரவு

திரிபுரா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பழங்குடியின குழுக்கள் ஆதரவு


ADDED : மார் 30, 2024 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2024 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரிபுராவில் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு அங்குள்ள முக்கியமான இரண்டு பழங்குடியின அமைப்புகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், முத்தரப்பு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்


வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலான பா.ஜ.,- திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் அனைத்து பிரச்னைகளையும் சுமுகமாக தீர்ப்பதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது.

டில்லியில் நடந்த கூட்டத்தின் போது, ஒப்பந்தத்தில் திரிபுராவின் முக்கிய எதிர்க்கட்சியான திப்ரா மோத்தா, திரிபுரா அரசு மற்றும் மத்திய அரசு கையெழுத்திட்டன.

இதையடுத்து, லோக்சபா தேர்தலுக்கு முன்பாக திப்ரா மோத்தா ஆளும் கூட்டணி அரசில் சேர சம்மதம் தெரிவித்துஉள்ளது.

இதனால், இங்கு லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு முக்கிய பழங்குடியின அமைப்புகளின் ஆதரவு அதிகரித்து உள்ளது.

கூட்டணி வெற்றி


இதைத் தொடர்ந்து, லோக்சபா தேர்தலை ஒட்டி, ஆளும் பா.ஜ., திரிபுரா பழங்குடி மக்கள் கட்சி, திப்ரா மோத்தா ஆகிய மூன்றும் இணைந்து ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி உள்ளன.

இதில், பா.ஜ., மாநில தலைவர் ரஜிப் பட்டாச்சார்ஜி, திப்ரா மோத்தா தலைவரும், முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசுமான பிரத்யோத் கிஷோர் மாணிக்ய டெபர்மா மற்றும் திரிபுரா பழங்குடி மக்கள் கட்சி தலைவர் பிரேம் குமார் ரியாங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

'இதன் வாயிலாக திரிபுராவின் இரண்டு லோக்சபா தொகுதிகளிலும், ஒரு சட்டசபை தொகுதி யிலும் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறுவது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது' என திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்து உள்ளார்.

- - நமது சிறப்பு நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us