sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கிருஷ்ணகிரி நகர தி.மு.க., செயலர் 'சஸ்பெண்ட்' பின்னணி என்ன?

/

கிருஷ்ணகிரி நகர தி.மு.க., செயலர் 'சஸ்பெண்ட்' பின்னணி என்ன?

கிருஷ்ணகிரி நகர தி.மு.க., செயலர் 'சஸ்பெண்ட்' பின்னணி என்ன?

கிருஷ்ணகிரி நகர தி.மு.க., செயலர் 'சஸ்பெண்ட்' பின்னணி என்ன?

1


ADDED : பிப் 10, 2025 05:35 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:35 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : துப்புரவு அலுவலரை தரக்குறைவாக பேசியது; நகராட்சி கமிஷனர் அறை கடிகாரத்தில் ரகசிய கேமரா வைத்தது என புகார் எழுந்ததால், கிருஷ்ணகிரி நகர தி.மு.க., செயலர் எஸ்.கே.நவாப், அக்கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

தி.மு.க.,வில் நிர்வாக வசதிக்காக, கிருஷ்ணகிரி நகர தி.மு.க., கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. இதற்கு புதிய நிர்வாகிகள் பட்டியல், மாவட்ட செயலர் தரப்பில் தயாரிக்கப்பட்டது. இதற்கு கிருஷ்ணகிரி நகரத்தின் ஒருங்கிணைந்த செயலராக இருந்த எஸ்.கே.நவாப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், கிருஷ்ணகிரி நகர தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் அதிகரித்தது.

எனவே, எஸ்.கே.நவாப் மீது, கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கிடையில், கிருஷ்ணகிரி நகராட்சியில் துப்புரவு அலுவலராக பணிபுரியும் ராமகிருஷ்ணன் என்பவரை, நவாப் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது.

கடந்த ஜன., 29ம் தேதி, மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில், தி.மு.க., நகரச் செயலர் நவாப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் டெங்கு துப்புரவு பணியாளர்கள், நகராட்சி அலுவலகம் முன் திரண்டு, துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணனை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இப்படி இரு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்க, மற்றொரு புறம், கமிஷனர் அறையில் உள்ள கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதில் பதிவான காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசில், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நகராட்சி கமிஷனர் அறை கடிகாரத்தில் கேமரா பொருத்தப்பட்டதற்கு காரணமே நவாப் தான் என்ற குற்றச்சாட்டும் கட்சித் தலைமைக்குச் சென்றது.

இந்நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் எஸ்.கே.நவாப் செயல்பட்டு வந்ததால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us