UPDATED : ஜூன் 09, 2024 10:24 AM
ADDED : ஜூன் 09, 2024 03:46 AM

புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவர், அமைச்சர், கடைசியாக உயரிய பதவியான துணை ஜனாதிபதி என அனைத்திலும் கால் பதித்தவர், வெங்கையா நாயுடு. இவரும், தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவும் படு நெருக்கம்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம், -பா.ஜ., கூட்டணி ஏற்பட காரணமாக இருந்தவர் வெங்கையா; ஏனெனில், திரைமறைவில் இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர்.
மோடி ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்கும் சந்திரபாபு நாயுடு, வெங்கையாவுடன் இணைந்து, வேறொரு முக்கிய விஷயத்தில் இறங்கியுள்ளதாக, டில்லி அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
தென்னகத்தில் உள்ள ஒரு முக்கிய கட்சி மீது, இந்த இருவரும் தன் கவனத்தை செலுத்தப் போகின்றனர். அந்த கட்சியை பலவீனப்படுத்துவரா அல்லது அதன் பாதையை மாற்றுவரா என்பது குறித்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.