ADDED : ஆக 27, 2024 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த வாரம் மாணவியருடன் ராகுல் கலந்துரையாடினார்.
அப்போது மாணவி ஒருவர் ராகுலிடம், 'நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராகுல் சிரித்தபடி கூறுகையில், 'கடந்த 20, 30 ஆண்டுகளாக இந்த கேள்வியை நான் எதிர்க்கொண்டு வருகிறேன்.
'இதனால், நான் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகிறேன். திருமணம் தொடர்பாக எந்த திட்டமிடலும் என்னிடம் இல்லை; அவ்வாறு நிகழ்ந்தால் பார்க்கலாம்' என்றார்.
உடனே அங்கு சூழ்ந்திருந்த மாணவியர், 'உங்கள் திருமணத்திற்கு எங்களையும் அழைப்பீர்களா' என்று ஒருமித்த குரலில் கேட்டனர்.
அதற்கு ராகுல் சிரித்தவாறு, 'நிச்சயமாக உங்களை அழைப்பேன்' என, குறிப்பிட்டார்.
இதுதொடர்பான வீடியோவை, காங்கிரஸ் கட்சி தன் சமூகவலைதள பக்கத்தில் நேற்று பதிவிட்டது.

