sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கேரளாவில் மா.கம்யூ., படுதோல்வியடைந்தது ஏன்?

/

கேரளாவில் மா.கம்யூ., படுதோல்வியடைந்தது ஏன்?

கேரளாவில் மா.கம்யூ., படுதோல்வியடைந்தது ஏன்?

கேரளாவில் மா.கம்யூ., படுதோல்வியடைந்தது ஏன்?


UPDATED : ஜூன் 16, 2024 12:31 AM

ADDED : ஜூன் 15, 2024 10:42 PM

Google News

UPDATED : ஜூன் 16, 2024 12:31 AM ADDED : ஜூன் 15, 2024 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'இண்டியா' கூட்டணி ஆளும் மாநிலங்களில், ஆளுங்கட்சி படுதோல்வியை சந்தித்த ஓரிரு மாநிலங்களில் முக்கியமானது கேரளா. இங்கு மார்க்சிஸ்ட் தலைமையில் இந்திய கம்யூ., உட்பட கூட்டணி கட்சிகளின் (எல்.டி.எப்.,) ஆட்சி நடக்கிறது. கூட்டணி ஆட்சி என்றாலும் மார்க்சிஸ்டிற்கு அறுதிப்பெரும்பான்மை உள்ளது. இங்கு பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே எல்.டி.எப்., கூட்டணி வெற்றி பெற்றது. கேரளாவில் ஒன்று, தமிழகத்தில் இரண்டு, ராஜஸ்தானில் ஒன்று என, இந்திய அளவில் நான்கு எம்.பி.,க்களை மட்டுமே பெற்று இருக்கிறது மார்க்சிஸ்ட். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு எம்.பி.,க்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

கணக்கு துவக்கிய பா.ஜ.,


ஆட்சி அதிகாரம் இருந்தும் கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தோல்வி அடைந்திருப்பது அக்கட்சியினரை கலங்க வைத்திருக்கிறது. கூடவே, மாநிலத்தில் நுழையவே முடியாது என சொல்லப்பட்டு வந்த பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருப்பது, இடதுசாரிகளை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கேரளாவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ., கேரளாவின் சில இடங்களில் மூன்றாம் இடத்துக்கு சென்றுவிட்டது.

அதேபோல், மாநிலத்தில் 15.56 சதவீதமாக இருந்த பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் தற்போது 19.17ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், மார்க்சிஸ்ட் கம்யூ., - காங்., கட்சிகளின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த 2019ல் நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் வென்ற ஒரே இடமான ஆலப்புழாவில், இந்த முறை தோல்வியடைந்துள்ளது. காரணம், கடந்த முறையை விட பா.ஜ., இம்முறை கூடுதலாக 1.10 லட்சம் ஓட்டுகள் பெற்றதுதான்.

முதல்வர் பினராயி விஜயன் சொந்த மாவட்டமும், கம்யூனிஸ்ட் கோட்டையுமான கண்ணுாரில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனாலும், பா.ஜ., அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது. கேரளாவின் பதினோரு சட்டசபை தொகுதிகளில் இம்முறை பா.ஜ., முதலிடம் பெற்றுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஓட்டு சரிவுக்கு காரணம்?


கம்யூனிஸ்ட்களின் பாரம்பரிய ஓட்டாகக் கருதப்படும் ஹிந்து ஈழவர் சமுதாய மக்களின் ஓட்டு, இந்த முறை பா.ஜ.,வுக்கு சென்றது. சிறுபான்மையினர் ஓட்டுகளையும் மார்க்சிஸ்ட் இழந்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கூட்டணி போராட்டங்களை நடத்தியிருந்தாலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையானோர் காங்.,குக்கே ஓட்டளித்துள்ளனர்.

அதேநேரம், கிறிஸ்துவர்கள் இம்முறை அதிக அளவில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர்.

திருச்சூர் தொகுதியில் 2.5 லட்சம் கிறிஸ்துவ ஓட்டுகள் உள்ளன. அதில் பெரும்பான்மையானோர் பா.ஜ.,வின் சுரேஷ் கோபிக்கு ஓட்டளித்ததால் தான், அவர் 70,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த எட்டாண்டு கால பினராயி விஜயன் ஆட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருக்கிறது. சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, உள்ளூர்களில் மா.கம்யூ., கட்சியினர் அடாவடி, கடும் நிதிப்பற்றாக்குறையால் அரசின் உதவி திட்டங்கள் ரத்தானது, அண்டை மாநிலமான தமிழகத்தை விட பெட்ரோல், டீசல் விலை 4 ரூபாய் அதிகம், விலைவாசி உயர்வு, ஆட்சி அதிகாரத்தில் முதல்வரின் மருமகனும் மந்திரியுமான ரியாஸின் தலையீடு, போன்றவை ஆட்சி மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அது லோக்சபா தேர்தலில் வெளிப்பட்டுள்ளது.

ஆனால், தன் ஆட்சி மீதான மக்கள் அதிருப்தியை முதல்வர் பினராயி விஜயன் ஏற்க மறுத்து, மத்திய அரசு மீதான அதிருப்தியில், கேரள மக்கள் காங்.,க்குக்கு ஓட்டளித்து விட்டனர் என, கருத்து சொல்லி வருகிறார்.

தேர்தல் முடிவுக்குப் பின், கிறிஸ்துவ பிஷப் ஒருவர், பினராயி விஜயன் ஆட்சி செயல்பாடுகளே மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டணி தோல்விக்குக் காரணம்' என கூறினார். கோபமான பினராயி விஜயன், பாதிரியார்களிலும் முட்டாள்களும் உண்டு' என்று கூறினார்.

கேரள மாநில பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், மேற்கு வங்கத்தில் கம்யூ., கட்சி வேரூன்றி இருந்தது. அங்கே, அக்கட்சியை முடித்துக் கட்டிவிட்டு, வெற்றி பெற்றது போல, இங்கும் வெற்றி பெறுவோம்' என்றார்.

சிங்கங்களை கழுதை ஆளக்கூடாது!


கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். கட்சியினர் கருத்துக்களை தலைமை ஏற்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூ.,வுக்கு கிடைக்க வேண்டிய பாரம்பரிய ஓட்டுகள் இம்முறை கிடைக்கவில்லை. சிறுபான்மையினரும் ஓட்டளிக்கவில்லை. பல பஞ்சாயத்துக்களில் பா.ஜ., இரண்டாமிடம் பெற்றுள்ளது. காரணம் என்ன என்று ஆராய வேண்டும். ஆயிரம் கழுதைகளை ஒரு சிங்கம் ஆளலாம், ஆனால், ஆயிரம் சிங்கங்களை ஒரு கழுதை ஆளக்கூடாது.

Image 1281799


ஜி.சுதாகரன், கேரள முன்னாள் அமைச்சர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும்!


கேரளாவில் கம்யூனிஸ்டுக்கு படுதோல்விதான். அதை ஒப்புக் கொள்கிறோம். ஆட்சி நிர்வாகத்தில் சீர்திருத்தம் தேவை. அதை சரிசெய்ய வேண்டும்.

Image 1281798


கோவிந்தன்,

செயலர், கேரள மார்க்சிஸ்ட் கம்யூ.,

--நமது சிறப்பு நிருபர்--






      Dinamalar
      Follow us