தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ வட மாநிலங்களில் பிரசாரம் செய்வாரா?

வட மாநிலங்களில் பிரசாரம் செய்வாரா?

வட மாநிலங்களில் பிரசாரம் செய்வாரா?


ADDED : மார் 31, 2024 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2024 02:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தமிழக அரசியல் தலைவர்கள், வட மாநிலங்களில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் பிரசாரம் செய்வது வழக்கம். த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் உட்பட பல தலைவர்கள், டில்லியில் கடந்த தேர்தல்களில் பிரசாரம் செய்துள்ளனர்.

தமிழக தேர்தல் ஏப்., 19ல் முடிந்த பின், இவர்கள் வட மாநில பா.ஜ.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்.

தமிழக தேர்தல் முடிந்த பின், ஒன்றரை மாதத்திற்கு பின், ஜூன் 4ல் தான் ஓட்டு எண்ணிகை. எனவே, தமிழக தலைவர்கள் வட மாநிலங்களில் பிரசாரம் செய்ய நிறைய நாட்கள் உள்ளன. 'இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இதை செய்வோம், அதை செய்வோம் என, சொல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின், வட மாநிலங்களுக்கு சென்று தன் கூட்டணிக்காக பிரசாரம் செய்வாரா?' என பா.ஜ.,வினர் கேள்வி எழுப்புகின்றனர்.

'ஸ்டாலின் வட மாநில பிரசாரம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. தமிழர்கள் அதிகம் வசிக்கும் டில்லியில் பிரசாரம் செய்யலாம்; ஆனால் அது காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவே முடியும். காரணம், சனாதனம் குறித்த தி.மு.க.,வின் கருத்து வட மாநிலத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. ஆனால், ஸ்டாலின் இங்கு பிரசாரம் செய்தால், எங்களுக்கு லாபம் தான் என்கின்றனர்' டில்லி பா.ஜ.,வினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us