sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

2014ல் பெற்ற 75 லட்சம் ஓட்டுகளை பா.ஜ., கூட்டணி தாண்டுமா?

/

2014ல் பெற்ற 75 லட்சம் ஓட்டுகளை பா.ஜ., கூட்டணி தாண்டுமா?

2014ல் பெற்ற 75 லட்சம் ஓட்டுகளை பா.ஜ., கூட்டணி தாண்டுமா?

2014ல் பெற்ற 75 லட்சம் ஓட்டுகளை பா.ஜ., கூட்டணி தாண்டுமா?

7


UPDATED : ஏப் 21, 2024 03:48 AM

ADDED : ஏப் 20, 2024 10:41 PM

Google News

UPDATED : ஏப் 21, 2024 03:48 AM ADDED : ஏப் 20, 2024 10:41 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., வாங்கிய 75 லட்சம் ஓட்டுகளை இந்த தேர்தலில் தாண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், 20 தொகுதிகளில் 2 லட்சம் முதல் 3 லட்சம் ஓட்டுகள் வரை வாங்குவோம் என பா.ஜ.,வினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

தமிழகத்தில் 1952ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் இருந்து போட்டியிட்டு வரும் பா.ஜ.,வுக்கு, 1998ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று எம்.பி.,க்களும், 1999ல் தி.மு.க., கூட்டணியில் நான்கு எம்.பி.,க்களும் வெற்றி பெற்றனர்.

38 தொகுதி


கடந்த 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., -- பா.ம.க., - ம.தி.மு.க., - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளுடன் பா.ஜ., கூட்டணி அமைத்தது.

இந்தக் கூட்டணி, நீலகிரி தவிர மற்ற 38 தொகுதிகளில் போட்டியிட்டு, 18.8 சதவீதம் அதாவது 75 லட்சத்து 24,776 ஓட்டுகளை கைப்பற்றின.

தி.மு.க.,வுக்கு ஓரிடம் கூட கிடைக்காத நிலையில், பா.ஜ., கூட்டணிக்கு கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி தொகுதியில் வெற்றி கிடைத்தது.

தி.மு.க., - அ.தி.மு.க., தயவின்றி, இரண்டு எம்.பி.,க்களை பா.ஜ., கூட்டணி பெற்றது. 1972க்கு பின், அது தமிழக வரலாற்றில் இது ஒரு புதிய சாதனை என அரசியல் வல்லுனர்கள் பாராட்டினர்.

தற்போது நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், பா.ம.க., - த.மா.கா., - அ.ம.மு.க., - அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்புக் குழு, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுடன், பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டு உள்ளது.

ஓட்டுப்பதிவு முடிந்து உள்ள நிலையில், இந்தக் கூட்டணி 2014ல் பெற்ற 75 லட்சம் ஓட்டுகளை தாண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ., கூட்டணியில் பல கட்சிகள் இருந்தாலும், 20 தொகுதிகளில் பா.ஜ., தனித்து போட்டியிடுவது போன்ற நிலையே ஏற்பட்டுஉள்ளது.

இது தொடர்பாக, பா.ஜ., மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் கூறியதாவது:

தென் சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, பெரம்பலுார், சிதம்பரம், ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 20 தொகுதிகளில் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை பா.ஜ.,வுக்கு ஓட்டுகள் கிடைக்கும்.

இதில் குறைந்தது ஐந்து தொகுதிகளில், 4 லட்சத்துக்கும் அதிகமாகவே ஓட்டுகளை பெற்று வெற்றி பெறுவோம். மற்ற தொகுதிகளிலும் குறைந்தது 15 சதவீத ஓட்டுகளை பெறுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனித்து போட்டி


இப்போது, கூட்டணி அமைத்து போட்டியிட்டு உள்ள தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் 2014ல் தனித்து போட்டியிட்டன. அப்போது குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கியை வைத்திருந்த தே.மு.தி.க., - ம.தி.மு.க., கட்சிகள் பா.ஜ., கூட்டணியில் இருந்தன.

ஆனால், இப்போது பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தினகரனும், பன்னீர்செல்வமும் இருப்பதால், பா.ஜ., கூட்டணி 75 லட்சம் ஓட்டுகளை தாண்டி, 80 லட்சத்துக்கும் அதிகமாகவே ஓட்டுகளை பெறும் என பா.ஜ.,வினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us