UPDATED : பிப் 24, 2025 05:40 AM
ADDED : பிப் 23, 2025 02:23 AM

புதுடில்லி: நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜயை, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் சமீபத்தில் சந்தித்தார். 'வரும் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், மாபெரும் கூட்டணியை விஜய் அமைக்க வேண்டும்; அ.தி.மு.க., - பா.ஜ.,வோடு விஜய் கூட்டணி சேர வேண்டும்' என கூறினாராம் கிஷோர்.
இதுதவிர, மூன்று முக்கிய விஷயங்களையும் கூறினாராம்... முதலாவது, - கட்சியை நன்றாக பலப்படுத்த வேண்டும்; தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் த.வெ.க., செல்ல வேண்டும்; சினிமா ஓரளவிற்கு தான் கை கொடுக்கும்.
இரண்டாவது, 2026 தேர்தலுக்கு முன், -கட்சியின் கட்டமைப்பை கொண்டு வர வேண்டும்; தனியாக போட்டியிட்டு, தி.மு.க.,வை வெல்ல முடியாது.
மூன்றாவது, -10 ஆண்டு வனவாசத்திற்கு பின், தி.மு.க., ஆட்சியை பிடிக்க காரணம், பலமான கூட்டணி; எனவே தனியாக போட்டியிடாமல், மற்ற கட்சிகளுடன் பேசி, அவர்களுடன் கூட்டணி அமையுங்கள் என்றாராம்.