sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வெள்ளெழுத்துக்கு கண்ணாடி வேண்டாம்; சொட்டு மருந்து விட்டால் பளிச் பார்வை

/

வெள்ளெழுத்துக்கு கண்ணாடி வேண்டாம்; சொட்டு மருந்து விட்டால் பளிச் பார்வை

வெள்ளெழுத்துக்கு கண்ணாடி வேண்டாம்; சொட்டு மருந்து விட்டால் பளிச் பார்வை

வெள்ளெழுத்துக்கு கண்ணாடி வேண்டாம்; சொட்டு மருந்து விட்டால் பளிச் பார்வை

1


ADDED : செப் 04, 2024 04:29 AM

Google News

ADDED : செப் 04, 2024 04:29 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: வெள்ளெழுத்து பிரச்னை ஏற்பட்டால் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் கண் சொட்டு மருந்து, இந்திய சந்தைகளில் அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது.

சாதாரணமாக, 40 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் பிரச்னை, 'பிரஸ்பயோபியா' என்றழைக்கப்படும், வெள்ளெழுத்து பிரச்னை.

தீர்வு


அதாவது, நம் கருவிழி, தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் இயல்பை இழந்து வருவதாகும். இதனால், ஒளியைப் பார்க்கும்போது விழித்திரையில் சரியாக கவனம் குவியாது. எனவே அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக தெரியும்.

தற்போதைக்கு இந்த பிரச்னைக்கு மூக்கு கண்ணாடி அணிவது, அறுவை சிகிச்சை செய்வது போன்றவையே தீர்வாக உள்ளன.

ஆண்டுக்கு ஒருமுறை கண் பார்வை திறனை பரிசோதித்து, தேவைப்பட்டால் கண்ணாடியை மாற்ற வேண்டியிருக்கும். தற்போது இந்த பிரச்னைக்கு, ஒரு கண் சொட்டு மருந்து வாயிலாக தீர்வு கிடைக்க உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'என்டோட் பார்மசூட்டிகல்ஸ்' என்ற மருந்து நிறுவனம், 'பிரஸ் வியூ' என்ற கண் சொட்டு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

இது, 40 முதல் 55 வயதுக்குட்பட்ட வெள்ளெழுத்து பிரச்னை உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்கும் என, அந்த நிறுவனம் கூறியுள்ளது.

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிகில் மசூர்கர் கூறியுள்ளதாவது:


வெள்ளெழுத்து பிரச்னைக்கு பல நாடுகளில் இதுபோன்ற கண் சொட்டு மருந்துகள் உள்ளன. ஆனால், இந்தியர்களுக்காக, இங்குள்ள பல காரணிகளின் அடிப்படையில், தனித்துவமான இந்த கண் சொட்டு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சிகளுக்குப் பின், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும், அடுத்த மாதத்தில் இருந்து இது விற்பனைக்கு வரும்.

இது, 350 ரூபாய்க்கு மருந்து கடைகளில் கிடைக்கும். டாக்டர்களின் பரிந்துரை அடிப்படையில் வாங்கி பயன்படுத்தலாம். இந்த சொட்டு மருந்து, கருவிழியின் அளவைக் குறைக்கும்.

செயல்திறன்

இதன் வாயிலாக, மிகவும் நெருக்கத்தில் உள்ள பொருட்களை கூட தெளிவாக பார்க்க முடியும்.

முதல் சொட்டு மருந்து செலுத்திய, 15 நிமிடங்களுக்குள் அதன் செயல் திறனை உணர முடியும். இது, ஆறு மணி நேரத்துக்கு சிறப்பாக செயல்படும். முதல் சொட்டு மருந்து செலுத்திய, 3 - 6 மணி நேரத்துக்குள் அடுத்த துளியை செலுத்தும்போது, அதன் செயல் திறன் மேலும் அதிகரிக்கும்.

மங்கலாக தெரிவது, நெருக்கத்தில் உள்ளது தெரியாமல் இருந்தது போன்ற பிரச்னைக்கு, கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ் அல்லது அறுவை சிகிச்சை இல்லாமலேயே சுலபமாக தீர்வு காண முடியும். ஒருவரின் பார்வைத் திறனின் குறைபாட்டின் அளவைப் பொறுத்து, இந்த மருந்தின் செயல்திறன் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us