125 ஆண்டுக்கு முந்தைய பழமையான நூல் : தஞ்சை ஆவண காப்பகத்தில் கண்டுபிடிப்பு
125 ஆண்டுக்கு முந்தைய பழமையான நூல் : தஞ்சை ஆவண காப்பகத்தில் கண்டுபிடிப்பு
UPDATED : மே 15, 2013 04:02 AM
ADDED : மே 15, 2013 03:59 AM

தஞ்சாவூர்: தஞ்சையில், 125 ஆண்டுக்கு முந்தைய, பழமையான, 26 நூல்கள், ஆவண காப்பகத்தில் இருந்ததை அறிந்த, கலெக்டர், அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆங்கிலேயர் காலத்தில், 1904ல் கட்டப்பட்டது. இந்த பழமையான கட்டடம், 100 ஆண்டுகளை கடந்தும், எவ்வித சிதிலமும் இல்லாமல், கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இவ்வளாகத்தில், சமூக நலத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கருவூலத் துறை, முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட போட்டோ எடுக்கும் மையம், வட்ட வழங்கல் அலுவலகம் செயல்படுகின்றன. இதில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் அருகில், ஆவண காப்பகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில்,
@nextcolumn@ பழைய ஆவணங்கள், வரைபடங்கள் பராமரிக்கப்படுகின்றன. ஆவண காப்பகத்துக்கு,நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில், கலெக்டர் பாஸ்கரன் வந்தார். காப்பகத்தை பார்வையிட்ட அவர், அங்குள்ள, மர பீரோவை திறக்கும்படி கூறினார். அதில், பழமையான, 26 புத்தகங்கள் இருந்ததை கண்டுபிடித்தார்.
இவை, 1878, 1884, 1893, 1901 உள்ளிட்ட ஆண்டுகளில், அச்சிடப்பட்டவை. இவற்றில், இந்திய நகரங்களின் வரைபடம், தஞ்சை நகர வரைபடம், 1,800 ம் ஆண்டின், மக்களின் பழக்க வழக்க நடைமுறை குறித்த தகவல்கள், இடம் பெற்றுள்ளன.மேலும், சிற்பக்கலை சிறப்புகள், வரலாறு, தஞ்சை நகர வரலாறு, ராமர் பாலம் குறித்த விபரம்,
@nextcolumn@ இந்திய கட்டடக் கலை நுட்பங்கள், தாமிரம், வெள்ளி உட்பட உலோகங்களின் தன்மைகள், சிறப்பம்சங்கள் குறித்து அரிய தகவல்கள், ஆங்கிலத்தில் இடம் பெற்றிருந்தன.இதையடுத்து, வரலாற்று தகவல் அடங்கிய, அரிய பொக்கிஷமான, 26 புத்தகங்களையும் பத்திரப்படுத்தி, நகல் எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.தொடர்ந்து, தஞ்சையில் இயங்கி வரும் சரஸ்வதி
மஹால் நூலகத்தில் எதிர்கால சந்ததியினரும் படிக்கும் வகையில் ஒப்படைக்க, கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக, தஞ்சை ஆய்வாளர்கள், கலெக்டருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
தஞ்சையில், கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ஆவண காப்பகத்தில், பழமையான, ஆங்கிலத்தில் அச்சிட்ட, 26 புத்தகங்கள் கிடைத்துள்ள தகவல், வரலாற்று ஆய்வாளர்களை, பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
