ADDED : ஆக 12, 2025 04:57 AM

சென்னை: சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. அதேபோல், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மட்டும், 5 லட்சம் வரை தெரு நாய்கள் இருக்கக் கூடும் என, கூறப்படுகிறது. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக, எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், மாநிலம் முழுதும், 25 லட்சம் வரையிலான தெரு நாய்கள் இருக்கலாம் என, கால்நடை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி முதல் ஜூன் வரை நடந்துள்ள நாய்க்கடி சம்பவங்கள்:
மாவட்டங்கள் - நாய்க்கடி பாதிப்பு - ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு
அரியலுார் - 3,768 - 0
செங்கல்பட்டு - 13,064 - 0
சென்னை - 5,970 - 0
கோவை - 8,690 - 1
கடலுார் - 8,567 - 1
தர்மபுரி - 3,056- 0
திண்டுக்கல் - 7,372 - 0
ஈரோடு - 8,725 - 0
கள்ளக்குறிச்சி - 6,194 - 0
காஞ்சிபுரம் - 9,747 - 1
கன்னியாகுமரி - 10,580 - 2
கரூர் - 5,387 - 0
கிருஷ்ணகிரி - 5,214 - 0
மதுரை - 6,633 - 2
மயிலாடுதுறை - 2,197 - 0
நாகப்பட்டினம் - 2,360 - 1
நாமக்கல் - 8,689 - 1
பெரம்பலுார் - 2,350 - 0
புதுக்கோட்டை - 10,482 - 0
ராமநாதபுரம் - 8,244 - 0
ராணிப்பேட்டை - 4,406 - 1
சேலம் - 19,250 - 1
சிவகங்கை - 10,310 - 2
தென்காசி - 4,535 - 0
தஞ்சாவூர் - 11,441 - 0
தேனி - 3,317 - 1
நீலகிரி - 1,624 - 0
திருவள்ளூர் - 10,478 - 1
திருவாரூர் - 10,353 - 0
திருச்சி - 11,371 - 0
திருநெல்வேலி - 5,906 - 0
திருப்பத்துார் - 9,005 - 0
திருப்பூர் - 5,728 - 0
திருவண்ணாமலை - 6,925 - 3
துாத்துக்குடி - 6,858 - 0
வேலுார் - 4,725 - 0
விழுப்புரம் - 7,936 - 0
விருதுநகர் - 8,236 - 0
மொத்தம் - 2,79,693 - 18
* கடந்த ஜூலையில் இருந்து, இம்மாதம் 10ம் தேதி வரை, 30,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 3.10 லட்சம் பேர் வரை, இதுவரை பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
ஆண்டு வாரியாக நாய்க்கடி
2023 - 4.40 லட்சம்
2024 - 4.80 லட்சம்
2025 - 3.10 லட்சம்