sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

இந்தியாவில் 8% குறைந்த ஹிந்துக்கள்: முஸ்லிம் மக்கள் தொகை 43% அதிகரிப்பு

/

இந்தியாவில் 8% குறைந்த ஹிந்துக்கள்: முஸ்லிம் மக்கள் தொகை 43% அதிகரிப்பு

இந்தியாவில் 8% குறைந்த ஹிந்துக்கள்: முஸ்லிம் மக்கள் தொகை 43% அதிகரிப்பு

இந்தியாவில் 8% குறைந்த ஹிந்துக்கள்: முஸ்லிம் மக்கள் தொகை 43% அதிகரிப்பு

18


ADDED : மே 10, 2024 07:10 AM

Google News

ADDED : மே 10, 2024 07:10 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நம் நாட்டில் 1950ல் இருந்து, 2015ம் ஆண்டுக்கு இடையே, ஹிந்துக்கள் மக்கள் தொகை 7.81 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில், 'சிறுபான்மையினர் மக்கள் தொகை -- நாடுகள் இடையேயான நிலை' என்ற பெயரில் விரிவான ஆய்வை நடத்தியது.

பிரதிநிதித்துவம்


இது குறித்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், 1950 மற்றும் 2015ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், பெரும்பான்மையினரான ஹிந்து மக்கள் தொகை 7.8 சதவீதம் குறைந்து, 78.06 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் மக்கள் தொகை 43.15 சதவீதம் அதிகரித்து, 14.09 சதவீதமாக உள்ளது. கிறிஸ்துவர்கள் மக்கள்தொகை 5.4 சதவீதம் உயர்ந்து, 2.36 சதவீதமாக உள்ளது.

சீக்கியரின் மக்கள் தொகை 1.85 சதவீதம், புத்த மதத்தினரின் எண்ணிக்கை 0.81 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ஜைனர்களின் எண்ணிக்கை 0.36 சதவீதம் மற்றும் பார்சி எண்ணிக்கை 0.004 சதவீதம் குறைந்துஉள்ளது. இந்த கணக்கெடுப்பு, எவ்வாறு மக்கள் தொகை உயர்ந்தது என்பதை கண்டுபிடிப்பதற்காக நடத்தப்படவில்லை. அதே நேரத்தில், சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா என்பதை ஆராய்வதற்காக நடத்தப்பட்டது.

இந்தியாவின் இந்த மக்கள் தொகை விபரங்கள், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் சுமுகமான சூழ்நிலை நிலவுவதையே காட்டுகிறது. சிறுபான்மையினருக்கு சிறப்பான சூழல் நிலவுகிறது என்பதையும் இது காட்டுகிறது. அதனால் தான், அண்டை நாடுகளில் இருந்து, இந்த காலகட்டத்தில் சிறுபான்மையினர் அதிகளவில் நம் நாட்டுக்குள் வந்துள்ளனர்.

பாதுகாப்பு


நம் அண்டை நாடுகளில் பெரும்பான்மையினர் எண்ணிக்கை, இதே காலகட்டத்தில் உயர்ந்துள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள நாடுகளில் அவர்களுடைய மக்கள் தொகை உயர்ந்துள்ளது. மாலத்தீவுகள் மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக அல்லாத ஐந்து நாடுகளில், இலங்கை, பூட்டானில் மட்டும் பெரும்பான்மையின சமூகத்தினரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

பொதுவெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாறாக, இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதுடன், வளர்ச்சியும் அடைந்து வருகின்றனர் என்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளில், அங்குள்ள பெரும்பான்மையினர் எண்ணிக்கையே உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சிறுபான்மையினர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

உதாரணம்


வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். உலக அளவில் பெரும்பான்மையினர் மக்கள் தொகை, 22 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதுபோல ஒவ்வொரு கண்டத்திலும் இதே சூழ்நிலை நிலவுகிறது. பெரும்பான்மையின மக்கள் தொகை உயர்வு மிகவும் அதிகமாக உள்ள 20 நாடுகளை பார்க்கும்போது, அவை, முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நாடாக உள்ளன.

அதேபோல், பெரும்பான்மையின மக்கள் தொகை அதிகமாக குறைந்துள்ள, 20 நாடுகளில் மூன்று மட்டுமே முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நாடாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மீது பா.ஜ., புகார்


இந்த ஆய்வறிக்கை குறித்து, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியுள்ளதாவது: கடந்த 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஹிந்துக்கள் எண்ணிக்கை 88 சதவீதமாகவும், முஸ்லிம்கள் எண்ணிக்கை 9.5 சதவீதமாகவும் இருந்தன. அதே நேரத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இது முறையே, 79.8 மற்றும் 14.5 சதவீதமாக இருந்தன.முஸ்லிம்கள் மக்கள்தொகை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில், முஸ்லிம்களையும் சேர்க்கப் போவதாக காங்கிரஸ் கூறி வருகிறது. அவ்வாறு செய்தால், இந்த பிரிவினருக்கு எதுவும் மிஞ்சாது. முஸ்லிம்கள் பல திருமணம் முறையை பின்பற்றுபவர்கள். அதனால், அவர்களுடைய மக்கள் தொகை தொடர்ந்து உயரும். இது, மத மாற்றத்துக்கும் வழிவகுக்கும். இதற்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us