ADDED : ஏப் 15, 2025 12:58 AM

திருச்சி: ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ, நேற்று அளித்த பேட்டி:
தமிழக கவர்னர் ரவி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ்., கொள்கை பரப்பு செயலராகவே செயல்பட்டு வருகிறார்.
ஒரு கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்னைகளை தீர்க்க, அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கருத்துகளைக் கேட்டு தலைமை முடிவெடுக்க வேண்டும்.
கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் குறித்து ஆதாரங்களுடன் தகவல் வந்தால், தலைமை அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அது புற்றுநோய் போல் பரவி, இயக்கத்தை அழித்து விடும்.
தி.மு.க., கூட்டணியை வலுவூட்டும் விதமாக ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கூட்டணிக்குள் எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தாத வகையில், அனைவருடைய செயல்பாடுகளும் இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு கேட்டு, காங்., சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கு அக்கட்சித் தலைவரே நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.