ADDED : பிப் 17, 2025 12:52 AM

'டிரைவிங் லைசென்ஸ்' மற்றும் வாகனப்பதிவு சான்றிதழுடன், ஆதார் முகவரி, மொபைல் போன் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
'சாரதி' மற்றும் 'வாஹன்' இணையதளத்தில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப்பதிவு சான்றிதழான ஆர்.சி., தரவுகள், 10 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்டவையாக உள்ளன.
பலவற்றில் ஆதார் எண்களோ, மொபைல் போன் எண்களோ முழுமையாக இல்லை. இதனால், அவர்களை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது.
வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'சாலை பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், லைசென்ஸ் மற்றும் ஆர்.சி., புத்தகம் வைத்திருப்பவர்கள், அவற்றில் உள்ள முகவரியை, ஆதார் எண் மற்றும் மொபைல் போன் எண் அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
'சாலை விதிமுறைகளை மீறியதாக அனுப்பப்பட்ட மின்னணு சலான்கள் பலவும் நிலுவையில் உள்ளதால், அபராதம் வசூலாகாமல் உள்ளது. விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது' என்றனர்
- நமது நிருபர் -.

