ADDED : அக் 18, 2024 05:27 AM

சென்னை: அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு விழாவை ஒட்டி, நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்; தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நால்வர் புறக்கணிப்பு?
சசிகலா, பன்னீர்செல்வம், தினகரனை, கட்சியில் சேர்க்குமாறு, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய 6 பேரும் பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக, ஏற்கனவே தகவல் வெளியானது.
இதுகுறித்த கேள்விக்கு, நேற்று பழனிசாமி கூறுகையில், ''நீக்கப்பட்டவர்களை இணைப்பது குறித்து, அந்த 6 பேரும் பேசவில்லை. அவர்களில் வேலுமணியும், நத்தம் விஸ்நாதனும் இங்கு வந்துள்ளனர். அவர்களிடம் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்,'' என்றார்.
அதில் வேலுமணி, அது தொடர்பான கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை; மற்ற 4 பேரும், நேற்று நடந்த அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு விழாவுக்காகக் கூட சென்னை வரவில்லை.