sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/ப்ரீமியம்/தே.மு.தி.க.,வுக்கு அ.தி.மு.க., துாது

தே.மு.தி.க.,வுக்கு அ.தி.மு.க., துாது

தே.மு.தி.க.,வுக்கு அ.தி.மு.க., துாது


UPDATED : ஜன 10, 2024 08:43 AM

ADDED : ஜன 09, 2024 10:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2024 08:43 AM ADDED : ஜன 09, 2024 10:26 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், நான்கு தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிட்டது. அந்த கட்சியை மீண்டும் கூட்டணிக்குள் இழுக்க, அ.தி.மு.க., முயற்சிகளை துவங்கியுள்ளது.

தொகுதிகள் குறித்து பேசுவதற்காக, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் ஒரு குழுவாகவும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் தனியாகவும் சென்று, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசியுள்ளனர்.

இதேபோல, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான பா.ஜ.,வினரும், பிரேமலதாவை சந்தித்து பேசியுள்ளனர்.

அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், நான்கு லோக்சபா தொகுதிகள் மட்டுமின்றி, ஒரு ராஜ்யசபா பதவியும், பிரேமலதா கேட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், கூட்டணி முடிவை அறிவிப்பதாக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம், பிரேமலதா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு பின், மாவட்ட செயலர்கள் கூட்டத்தை நடத்தி, கூட்டணி முடிவை தே.மு.தி.க., தலைமை அறிவிக்கவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us