ADDED : ஜன 07, 2024 04:24 AM

'தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை தொடர பா.ஜ., விரும்பியது. ஆனால், பழனிசாமியோ, எங்களை கழட்டிவிட முடிவெடுத்தார். இது, அவர் திடீரென எடுத்த முடிவல்ல; பல மாதங்களுக்கு முன்பாகவே முடிவு செய்து விட்டார்' என்கிறார் பா.ஜ.,வின் சீனியர் அமைச்சர் ஒருவர்.
'காங்கிரசுடன் பேச்சு நடத்த பழனிசாமி பல முயற்சிகளை மேற்கொண்டார்; இன்னமும் முயற்சித்து வருகிறார். இது, எங்களுக்கு முன்பே தெரியும்' என்கிறார் அவர். 'சிறுபான்மையினரின் ஓட்டுகளை குறி வைத்து, பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகி விட்டார். ஆனால், இந்த லோக்சபா தேர்தலில் அவர் காணாமல் போய் விடுவார். பலத்த தோல்வியை அ.தி.மு.க., சந்திக்கும்' என சொல்லும் அந்த சீனியர் தலைவர், தமிழகத்தில் பா.ஜ.,வின் நிலை குறித்தும் பேசினார்.
'அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பா.ஜ.,வின் ஓட்டு வங்கி உயர அவர் பாடுபடுகிறார். தி.மு.க.,விற்கு எதிரான அலையை, தமிழகத்தில் பார்க்க முடிகிறது. தமிழக கூட்டணி குறித்து, விரைவில் முடிவெடுப்போம்' என்றார், அந்த சீனியர் பா.ஜ., அமைச்சர்.