தமிழகத்தில் ஒரே மாதத்தில் 127 பாலியல் குற்றங்கள்: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஒரே மாதத்தில் 127 பாலியல் குற்றங்கள்: அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : அக் 03, 2025 04:50 AM

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக, 127 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிராக 127 பாலியல் குற்றங்கள் அரங்கேறிய கொடூரம் நடந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவலநிலையின் கொடூர உச்சம் இது.
கடந்த நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில், மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் என, அனை த்து பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலை என்றதும், தி.மு.க., அனுதாபி ஞானசேகரனால் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.
க டந்த 2021ல், 4,465 ஆக இருந்த 'போக்சோ' வழக்குகள், தி.மு.க., ஆட்சியில் 6,975 ஆக அதிகரித்துள்ளன. தமிழகத்தில் குடும்ப வன்முறை குற்றங்கள் 21.2 சதவீதம் அதிகரித்துள்ளன.
இந்த வெட்கக்கேடான நிலைக்கு, பொம்மை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு தலைகுனிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.