'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,
'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,
UPDATED : ஜூன் 17, 2025 09:21 AM
ADDED : ஜூன் 17, 2025 09:19 AM

பொள்ளாச்சி: தக் லைப் படத்தில் இடம் பெற்ற 'முத்த மழை' பாடலை, 'பொலிட்டிக்கல் வெர்ஷனாக' மாற்றி, அ.தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கமல், சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான தக் லைப் படத்தில், 'முத்த மழை' பாடல் பிரபலமானது. இந்த பாடலை, தி.மு.க., அரசை விமர்சிக்கும் வரிகளுடன், பொலிட்டிக்கல் வெர்ஷனாக மாற்றி, அ.தி.மு.க.,வினர் வெளியிட்டு, சமூக வலைதளங்களில் பரப்புவதோடு, வாட்ஸாப் எண்களில் 'ஸ்டேட்டஸ்' ஆக வைத்து வருகின்றனர்.
அதில்,
'மூக்க ஸ்டாலின் ஆட்சி முடிஞ்சி போகாதோ...
மொத்த பெண்களுக்கும், 'சேப்டி' வாராதோ...
ஊடகம் உண்மை மறுக்கும் - அது
உண்மைகளை சொல்ல மறுக்கும்
கஞ்சா இரவோ, கள்ள இரவோ
எல்லாம் ஒருவனின் சொல்லாத தொழிலோ
இன்னும் வரும் உந்தன் கதை...'
என பாடல் வரிகள் நீள்கின்றன.
இதையடுத்து, அ.தி.மு.க., மற்றும் முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு பதிலடி கொடுக்க, தி.மு.க.,வினர் சினிமா பாடல்களை தேடி வருகின்றனர்.