sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

உங்களுடன் ஸ்டாலினுக்கு பதிலடியாக அ.தி.மு.க.,வின் எங்களுடன் எடப்பாடியார்! சூடேறும் அரசியல் களம்

/

உங்களுடன் ஸ்டாலினுக்கு பதிலடியாக அ.தி.மு.க.,வின் எங்களுடன் எடப்பாடியார்! சூடேறும் அரசியல் களம்

உங்களுடன் ஸ்டாலினுக்கு பதிலடியாக அ.தி.மு.க.,வின் எங்களுடன் எடப்பாடியார்! சூடேறும் அரசியல் களம்

உங்களுடன் ஸ்டாலினுக்கு பதிலடியாக அ.தி.மு.க.,வின் எங்களுடன் எடப்பாடியார்! சூடேறும் அரசியல் களம்

4


ADDED : ஜூலை 27, 2025 03:48 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 03:48 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில், தி.மு.க., சார்பில், மக்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், அதே பாணியில், அ.தி.மு.க., சார்பில், 'உருட்டுகளும் திருட்டுகளும், துரோக மாடல் உருட்டுகள்' என்ற தலைப்பில், மக்களிடம் 10 கேள்விகள் கேட்கப்படுகின்றன.

தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழகம்' இயக்கம் துவக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. கட்சியினர் மக்களை சந்தித்து, ஆறு கேள்விகள் அடங்கிய படிவத்தை வழங்கி, அதை பூர்த்தி செய்து தரும்படி கேட்கின்றனர்.



அதில், மகளிர் உரிமைத் தொகை பெற்றிட, விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட, அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும்.

நலத்திட்டங்களை, நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா; டில்லி அதிகாரத்திற்கு அடிபணியாமல், தமிழகத்தின் உரிமையை காக்கும் முதல்வர்தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா.

துரோக மாடல் மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்க வேண்டிய நிதிப் பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறு வரையறை, கொடுமையான 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றில் இருந்து, தமிழகம் மற்றும் நம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட வேண்டுமா.

இவை அனைத்தும் சாத்தியப்பட, நிலையான ஆட்சியை வழங்கிட, அனுபவமிக்க ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டுமே முடியும் என நம்புகிறீர்களா; அப்படியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன், தாங்களும், தங்கள் குடும்பமும், 'ஓரணியில் தமிழ்நாடு' என, கரம் கோர்க்க விரும்புகிறீர்களா என்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

பெரும்பாலான கேள்விகள், 'ஆம்' என சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே பாணியில், அ.தி.மு.க., சார்பில், 'உருட்டுகளும் திருட்டுகளும், துரோக மாடல் உருட்டுகள்' என்ற தலைப்பில், 10 கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு விலக்கு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 100 ரூபாய் காஸ் மானியம், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துதல்.

மக்களிடம் கேள்விகள் மின் கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தும் திட்டம், 5.5 லட்சம் அரசு வேலைகள், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு அரசு வேலை, அனைத்து பயிர்களுக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலை, கரும்பின் ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்குதல்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாக அதிகரிப்பு போன்ற, தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என கேட்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, 10க்கு 0 மதிப்பெண் போட்டு, துரோக தி.மு.க.,விற்கு நான் தரும் மார்க் என குறிப்பிடும் வகையில், நோட்டீஸ் அச்சிடப் பட்டுள்ளது.

மேலும், அதில் 'என் நலனுக்காக இ.பி.எஸ்., உடன் நான்' என்ற வாசகம் அச்சிடப்பட்டு, அதன் கீழ் சம்பந்தப்பட்டவர் விபரம் சேகரிக்கப்படுகிறது.

இரு கட்சிகளும், மக்களிடம் கேள்விகள் கேட்டு பதில் பெறுவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், சமூக வலைதளங்களில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஐ.டி., அணி மோதல்களும் தினசரி வாடிக்கையாகி விட்டது. ஒருவரையொருவர் தொடர்ந்து மீம்களாலும், கேள்விகளாலும் தாக்கி வருகின்றனர்.

ஒளிரும் டிஸ்பிளே தமிழக அரசின், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை தி.மு.க., திட்டமாகவே பார்க்கும் அ.தி.மு.க., அதற்குப் பதிலடியாக, 'உங்களுடன் ஸ்டாலின்' என்பதற்குப் பதிலாக, 'எங்களுடன் எடப்பாடியார்' என்ற ஒளிரும் டிஸ்பிளேக்களை, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் அ.தி.மு.க.,வினர் மாட்டி வருகின்றனர்.

'இதை எப்படி எதிர்கொள்வது என தி.மு.க., தரப்பிலும் யோசித்து வருகிறோம்' என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us