sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி? அமித் ஷாவை சந்திக்கிறார் ஹெச்.ராஜா

/

மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி? அமித் ஷாவை சந்திக்கிறார் ஹெச்.ராஜா

மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி? அமித் ஷாவை சந்திக்கிறார் ஹெச்.ராஜா

மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி? அமித் ஷாவை சந்திக்கிறார் ஹெச்.ராஜா

28


ADDED : செப் 09, 2024 05:02 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:02 AM

28


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பின் பேரில், வரும் 10ல் டில்லி செல்லும், தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, மீண்டும் அ.தி.மு.க., கூட்டணி என்ற கருத்தை வலியுறுத்த உள்ள தகவல் பரவி இருக்கிறது.

கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க., கூட்டணியை விட்டு, தனித்து போட்டியிட்ட பா.ஜ.,வுக்கு ஓட்டு சதவீதம் கூடினாலும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க.,வுடனான கூட்டணி முறிவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையே காரணம் என்ற குற்றச்சாட்டை, பா.ஜ.,வினரும் பேச துவங்கினர்.

இந்நிலையில், அண்ணாமலை சர்வதேச அரசியல் சான்றிதழ் படிப்புக்காக லண்டன் சென்றுவிட, தமிழக பா.ஜ.,வை ஒருங்கிணைத்து நடத்த, ஹெச்.ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை இங்கு இல்லாத நேரத்தில், அ.தி.மு.க.,வுடன் இணைக்கமான சூழலை ஏற்படுத்த, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:


கடந்த 3ம் தேதி டில்லி சென்ற ஹெச்.ராஜா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை முறித்ததே, கட்சியின் தோல்விக்கு காரணம். வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தலுக்கு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதே, கட்சிக்கு நல்லது என, ராஜா கூறியுள்ளார்.

'இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர்கள் கருத்துக்களை அறிந்து வாருங்கள். இதுகுறித்து, பிரதமரிடம் பேசி நல்ல முடிவெடுக்கலாம்' என, அமித்ஷா கூறி அனுப்பியுள்ளார். இதையடுத்தே, தமிழகம் திரும்பிய ராஜா, 'பழனிசாமியை நல்ல நண்பர்' என்று கூறி, அ.தி.மு.க.,வுடன் இணக்கம் காட்டியுள்ளார். சமரச முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே, வரும் 10ம் தேதி டில்லிக்கு வருமாறு, ராஜாவுக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. டில்லி செல்லும் ராஜா, அ.தி.மு.க., கூட்டணி குறித்த, தமிழக பா.ஜ., தலைவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்த உள்ளார். அண்ணாமலை தவிர்த்து முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு இருப்பதை, அமித் ஷாவிடம் ராஜா சொல்வார். ஏற்கனவே, த.மா.கா., தலைவர் வாசன் வழியாக, அ.தி.மு.க., கூட்டணிக்கான முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us