உள்ளடக்கத்திற்கு செல்ல

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர்: 6 நாள் மட்டுமே சென்ற அன்புமணி
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர்: 6 நாள் மட்டுமே சென்ற அன்புமணி
ADDED : ஏப் 09, 2025 04:51 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜன., 31ல் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் துவங்கியது. ஏப்., 4ம் தேதி வரை 26 வேலை நாட்கள் நடந்தது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.பி.,க்களின் வருகைப் பதிவின் விபரங்கள் தற்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா இணையதளங்களில் வெளியாகி உள்ளன.
இதன்படி ராஜ்யசபாவில் பா.ம.க.,வின் அன்புமணி ஆறு நாட்கள் மட்டுமே சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார். நியமன எம்.பி.,யான இசையமைப்பாளர் இளையராஜா இரண்டு நாட்கள் வந்துள்ளார்.
தி.மு.க., - எம்.பி.,க்கள் சிவா, கிரிராஜன், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை ஆகியோர் இந்த கூட்டத்தொடரின் அனைத்து நாட்களும் சபைக்கு வருகை தந்துள்ளனர்.
