நிர்வாகிகள் பட்டியலுடன் மத்திய பா.ஜ., தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை
நிர்வாகிகள் பட்டியலுடன் மத்திய பா.ஜ., தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை
ADDED : நவ 22, 2024 05:46 AM

மதுரை: 'அரசியல் மேற்படிப்பை முடித்து நவ.28ல் தமிழகம் வரும் அண்ணாமலை, புதிய நிர்வாகிகள் பட்டியலுடன் டில்லி மத்திய பா.ஜ., தலைவர்களை சந்திக்க உள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அப்படிப்பை முடித்து சான்றிதழும் பெற்றுவிட்டார். நவ.28ல் தமிழகம் திரும்பும் அவர் 3 மாதங்களாக தமிழகத்தில் இல்லாத நிலையில், ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தலைமையில் கட்சி வழிநடத்தப்பட்டது.
தமிழகம் திரும்பும் அண்ணாமலை, கட்சியை 2026 சட்டசபை தேர்தலுக்கு ஏற்ப வழிநடத்த ஆயத்தமாகி வருகிறார். கட்சிக்குள் நிர்வாக கட்டமைப்பை மாற்றி அமைக்க உள்ளார். டிசம்பர் முதல் வாரம் டில்லி செல்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்திக்க உள்ளார். தமிழகத்தின் புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வழங்க உள்ளார்.
பெரும்பாலும் இளைஞர்களைக் கொண்ட இந்த பட்டியலை இப்போதே தயார் செய்துவிட்டதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர். பல மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கட்சியின் இளைய தலைமுறையினர் தெரிவிக்கின்றனர்.