sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பற்றி எரியும் அ.தி.மு.க., கூட்டணி: எண்ணெய் ஊற்றும் அண்ணாமலை

/

பற்றி எரியும் அ.தி.மு.க., கூட்டணி: எண்ணெய் ஊற்றும் அண்ணாமலை

பற்றி எரியும் அ.தி.மு.க., கூட்டணி: எண்ணெய் ஊற்றும் அண்ணாமலை

பற்றி எரியும் அ.தி.மு.க., கூட்டணி: எண்ணெய் ஊற்றும் அண்ணாமலை

35


ADDED : ஜூலை 18, 2025 03:44 AM

Google News

35

ADDED : ஜூலை 18, 2025 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவானதில், என் பங்கு இல்லை. கூட்டணி ஆட்சி என, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு முறை அல்ல; மூன்று முறை கூறியிருக்கிறார். இதில் அ.தி.மு.க.,வுக்கு மாற்று கருத்து இருந்தால், அமித் ஷா உடன் பேசலாம்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

'தி.மு.க., பைல்ஸ்' முதல் பாகம் வெளியிட்டபோது, அக்கட்சி எம்.பி., டி.ஆர்.பாலு உள்ளிட்டோரின் குடும்ப சொத்துக்களின் விபரங்களை வெளியிட்டோம். அவர், என் மீது தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு நடக்கிறது.

நீதிமன்றம் அழைக்கும் போதெல்லாம் நான் வருகிறேன். வழக்கு தொடர்ந்தவர் வரவில்லை. கர்மவீரர் காமராஜரை வீழ்த்தியதற்கு, தி.மு.க., தான் முக்கிய பொறுப்பு.

கடந்த 1967 பிரசாரத்தின் போது, காமராஜர் குறித்து கருணாநிதி பேசியதை இன்று வெளியிட்டால், மானமுள்ள ஒரு காங்கிரசார் கூட, தி.மு.க., கூட்டணியில் இருக்க மாட்டார்கள்.

கண்டிக்கிறேன்


காமராஜர் தன் கடைசி காலத்தில், 'இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்றார். அப்படி இருக்கும் போது, அவர் கருணாநிதியிடம் அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை. வரலாற்றை மாற்றி, மக்களை குழப்புவதை கண்டிக்கிறேன். மானமுள்ள காங்கிரஸ் கட்சி பார்த்துக் கொண்டிருக்கிறதா?

காமராஜரை கேவலப்படுத்தியதோடு இல்லாமல், உண்மைக்கு புறம்பாகவும் பேசியுள்ளனர். காங்கிரஸ் தலைவர்கள், கண்டன அறிக்கை தராமல், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வர தயாரா; தனியாக போட்டியிட தயாரா?

தி.மு.க., ஆட்சியை துாக்கி எறிய, மக்கள் தயாராகி விட்டனர். பா.ஜ., வலிமையை அனைவரும் பேச ஆரம்பித்துள்ளனர். பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு பின், அரசியல் களம் மாறியுள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும்போது, தி.மு.க., தனியாக போட்டியிட வாய்ப்புள்ளது. அதனுடைய பிதற்றலாகத் தான், ஸ்டாலின், உதயநிதி பேசுகின்றனர்.

தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். அதனுடன் எந்த கட்சி சேர்ந்தாலும் வீழும். தி.மு.க., கூட்டணியில் இருந்து வி.சி., கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியே வர தயாராகி விட்டன. மக்களின் கோபத்தை, தி.மு.க., கூட்டணி கட்சிகள் படிக்க ஆரம்பித்து விட்டன.

கூட்டணி ஆட்சி


அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவானதில் என் பங்கு எதுவும் இல்லை. அப்படி இருக்கும்போது, என் தலைவர் அமித் ஷா சொல்வதை தான், நான் கேட்டாக வேண்டும்.

அவர் மிக தெளிவாக சொல்லிய பின், 'கூட்டணி ஆட்சி இல்லை' என்று நான் சொன்னால், இந்த கட்சியில் தொண்டனாக, தலைவனாக இருக்க எனக்கு தகுதியில்லை என்று அர்த்தம்.

என் தலைவர் சொன்ன கருத்தை, நான் ஏற்றுக் கொள்ள முடியாமல், என் தலைவர்களின் கருத்தை வலுப்படுத்த முடியாமல், என் தலைவர்கள் சொன்ன கருத்திலேயே சந்தேகம் எழுப்பினால், நான் தொண்டனாக இருக்கக்கூடாது. இது என் கருத்து.

தலைவர்கள் பேசியுள்ளனர். இதில் உறுதிபட இருக்கிறேன். என் தலைவர்கள் நிலையை மாற்றும் போது, நான் மாற்றிக் கொள்கிறேன்.

இந்த கூட்டணியை அண்ணாமலை உடைக்க பார்க்கிறார் என நான்கு பேர் வருவர். அமித் ஷா ஒரு முறை அல்ல; மூன்று முறை கூறியிருக்கிறார். இதில் அ.தி.மு.க.,வுக்கு மாற்று கருத்து இருந்தால், அமித் ஷா உடன் பேசலாம்.

என் தலைவர் சொல்லாத வரை, கட்சி எடுத்த முடிவில் இருந்து, நான் எப்படி பின்னே செல்ல முடியும். தமிழகத்தில் பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், முதன் முதலாக கூட்டணி ஆட்சி என்று பேச ஆரம்பித்துள்ளன.

என் கட்சி அமைச்சரவை யில் இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கருதுகின்றனர். உதயநிதி காலத்தில், தி.மு.க., இருக்காது. ராமதாஸ், அன்புமணி சமாதானமாக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us