தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ஜூலை 12ல் பொள்ளாச்சியில் முதல் மாநாட்டை நடத்துகிறார் அண்ணாமலை

ஜூலை 12ல் பொள்ளாச்சியில் முதல் மாநாட்டை நடத்துகிறார் அண்ணாமலை

ஜூலை 12ல் பொள்ளாச்சியில் முதல் மாநாட்டை நடத்துகிறார் அண்ணாமலை

3


UPDATED : ஜூலை 03, 2026 06:25 AM

ADDED : ஜூலை 03, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2026 06:25 AM ADDED : ஜூலை 03, 2026 05:38 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: பா.ஜ.வில் இருந்து விலகிய அண்ணாமலை தொடங்கியுள்ள 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் முதல் மாநாடு ஜூலை 12ம் தேதி, பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அண்ணாமலை பேசியதாவது: மருத்துவ துறையில், ஒரு லட்சம் பேருக்கு 290 முதல், 310 படுக்கைகள் என்ற வீதத்தில், மருத்துவமனைகளில் இருக்க வேண்டும். தற்போது, 130 படுக்கைகள் மட்டுமே உள்ளன. அரசு மருத்துவமனைகளில், 10 படுக்கைகள் தான் உள்ளன. மருத்துவத்துறை வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில், அனைத்துத்துறைகளிலும் நேர்மையான, துாய்மையான தலைவர்கள் உருவாக்கப்படுவார்கள். தலைவர் மட்டுமே நேர்மையாக இருந்தால் போதாது. மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கிராமங்களிலும் நேர்மையான தலைவர்களை உருவாக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பில், ஜூலை 12, மாலை, 4:00 மணிக்கு பொள்ளாச்சியில் முதல் மாநாடு நடக்கிறது. தமிழகம் முழுதும், அமைப்பு சார்பில் மாநாடுகள் நடத்தப்படும். இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us