sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

இரண்டு நாளில் முடிவை சொல்லுங்க: தே.மு.தி.க.,விற்கு இ.பி.எஸ்., கெடு

/

இரண்டு நாளில் முடிவை சொல்லுங்க: தே.மு.தி.க.,விற்கு இ.பி.எஸ்., கெடு

இரண்டு நாளில் முடிவை சொல்லுங்க: தே.மு.தி.க.,விற்கு இ.பி.எஸ்., கெடு

இரண்டு நாளில் முடிவை சொல்லுங்க: தே.மு.தி.க.,விற்கு இ.பி.எஸ்., கெடு

9


UPDATED : ஜன 19, 2026 01:53 AM

ADDED : ஜன 19, 2026 01:48 AM

Google News

UPDATED : ஜன 19, 2026 01:53 AM ADDED : ஜன 19, 2026 01:48 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'இரண்டு நாட்களில் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க வேண்டும்' என, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதாவிற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் கெடு விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தரப்பில், கூட்டணி பேச்சு தீவிரம் அடைந்துஉள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம், வரும் 23ம் தேதி மதுராந்தகத்தில் நடக்கிறது.

இதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். 'இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்க வேண்டும்; அதற்காக, கூட்டணி பேச்சுகளை விரைவாக முடிக்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, பா.ஜ., தரப்பில் அழுத்தம் தரப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, பல்வேறு கட்சித் தலைவர்களுடன், அ.தி.மு.க., குழு ரகசியமாக கூட்டணி பேச்சில் ஈடுபட்டுள்ளது. தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க, ஏற்கனவே பல கட்ட பேச்சு நடந்துள்ளது.

அ.தி.மு.க., தரப்பில் எட்டு சட்டசபை தொகுதிகள் வரை கொடுக்க ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தே.மு.தி.க., தரப்பில் 21 சட்டசபை தொகுதிகள், ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்கப்பட்டுள்ளது.

'ஒவ்வொரு தொகுதிக்கும், தி.மு.க.,விற்கு இணையாக தேர்தல் செலவு செய்ய உதவ வேண்டும்' என்றும் கேட்கப்பட்டு உள்ளது. ஆனால், ராஜ்யசபா சீட்டை இப்போது தர இயலாது; 10 சட்டசபை தொகுதிகள் வரை வழங்குவதாக பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு வாயிலாக, தி.மு.க., கூட்டணிக்கு வர வலியுறுத்தி, தே.மு.தி.க.,விடம் கூட்டணி பேச்சு நடந்து வருகிறது. அ.தி.மு.க.,விடம் வைத்த கோரிக் கையை, தி.மு.க.,விடமும் பிரேமலதா வலியுறுத்தி உள்ளார்.

அதற்கு, தி.மு.க., தரப்பில் இசைவு தெரிவிக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டி இருப்பதால், ஏழு தொகுதிகள் மட்டும் தருவதாக உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

ராஜ்யசபா எம்.பி., பதவி தொடர்பாக, எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. அ.தி.மு.க.,விடம் பேசிக் கொண்டே தி.மு.க.,விடமும் பேசுவது, பழனிசாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, பிரதமர் மோடி வருகைக்கு முன், கூட்டணியை இறுதி செய்தாக வேண்டிய நெருக்கடியில் பழனிசாமி உள்ளார். எனவே, 'அடுத்த இரண்டு நாட்களில், கூட்டணி முடிவை தெரிவிக்க வேண்டும்' என, பிரேமலதாவிற்கு கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us