sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அபராதத்தை தாண்டி மின் இணைப்பும் துண்டிப்பு; வடிகாலில் கழிவுநீர் விடுவோருக்கு தண்டனை

4

UPDATED : டிச 24, 2024 06:43 AM

ADDED : டிச 23, 2024 11:31 PM

Google News

UPDATED : டிச 24, 2024 06:43 AM ADDED : டிச 23, 2024 11:31 PM

4

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மழைநீர் வடிகாலில், சட்ட விரோதமாக கழிவுநீர் விடும் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நீர் நிலைகளும் மாசடைந்து வருகின்றன. சட்ட விரோதமாக கழிவுநீர் விடும் கட்டடங்களுக்கு அபராதம் என்ற நிலையைத் தாண்டி, மின் இணைப்பையும் துண்டிப்பது என்ற நல்ல முடிவை, குடிநீர் வாரியம் எடுத்துள்ளது. இது தொடர்பாக, மின் வாரியத்துடன் பேச்சு நடத்தி, விரைவில் அதிரடி நடவடிக்கை துவங்க உள்ளது.

சென்னை குடிநீர் வாரியத்தில், 13.35 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும், 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், 70 கோடி லிட்டர் கழிவுநீராக வெளியேறுகிறது. இந்த கழிவுநீரை, 321 உந்து நிலையங்கள் வழியாக, 21 இடங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது.

இதில், இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் சுத்திகரிக்கப்படும் நீரை, தொழிற்சாலைகளுக்கு வழங்குவதுடன், ஏரியில் விடப்படுகிறது. மீதமுள்ள நீர் கடலில் விடப்படுகிறது. இதற்காக, 5,500 கி.மீ., நீளத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்ற, 1.35 லட்சம் இயந்திர நுழைவு வாயில்கள் உள்ளன.

தலையீடு

குழாயில் அடைப்பு ஏற்படாமல், நீரோட்டம் சீராக இருந்தால் தான், கழிவுநீர் பிரச்னை இருக்காது. ஆனால், குடிநீர் வாரியத்தில், தினமும் கழிவுநீர் பிரச்னை என, 400 முதல் 500 புகார்கள் பதிவாகின்றன. குழாய் அடைப்பை சரி செய்ய, 300க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் இருந்தும், பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உணவகங்கள், மருத்துவமனைகள், விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் என, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. இதில், கழிவுநீர் இணைப்புடன், சேம்பர் என்ற வடிகட்டி அமைத்து, வாரியம் கூறிய வழிகாட்டுதல்படி, கழிவுநீரை குழாயில் விட வேண்டும்.

ஆனால், பெரும்பாலான கட்டடங்களில் இணைப்பு இருந்தும், உரிய வழிகாட்டுதலை கடைப்பிடிப்பதில்லை. மாறாக, மற்றொரு குழாய் அமைத்து, கழிவுநீரை வடிகாலில் விடுகின்றனர். இரவு நேரத்தில், பக்கவாட்டில் துளை போட்டு குழாய் இணைப்பு கொடுக்கின்றனர்.

பழைய வடிகால்களை இடித்துவிட்டு புதிய வடிகால் கட்டும்போது, பணி செய்யும் ஊழியர்களுக்கு, சில ஆயிரம் ரூபாய் கொடுத்து, ஒவ்வொரு கட்டடத்தில் இருந்தும், சட்டவிரோதமாக கழிவுநீர் குழாய், மழைநீர் வடிகாலில் இணைக்கப்படுகிறது. வடிகால்களை மூடி விடுவதால், இணைப்பு வெளியே தெரிவதில்லை.

சென்னையில் உள்ள, 95 சதவீத மழைநீர் வடிகால்களிலும் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. குறிப்பாக, வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள சாலையை ஒட்டி உள்ள வடிகால்களில் அதிகமாக கழிவுநீர் ஓடுகிறது என, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதை தடுக்க, குழாயை கண்டுபிடித்து அடைப்பது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கை எடுத்தாலும், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் தலையீடு காரணமாக, அதை முழுமையாக நடைமுறைப்படுத்த முடிவதில்லை.

10 தவணை

இந்த பிரச்னை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கவனத்திற்கு சென்றது. அவர், மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, 'குடிநீர், கழிவுநீர் இணைப்பை துண்டித்தால், முறையாக இணைப்பு எடுத்துள்ள பக்கத்து கட்டட உரிமையாளர்கள், சாலையில் செல்வோர் பாதிக்கப்படுவர். இதனால், மின் இணைப்பை துண்டிக்கலாம்' என, அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

பல கட்ட ஆலோசனைக்குப்பின், மின் இணைப்பை துண்டிப்பது என்ற முடிவு, இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

கழிவுநீர் இணைப்புக்கு, 5,000 - 7,500 ரூபாய் கட்டணம் செலுத்தினால், எளிய முறையில் இணைப்பு வழங்குகிறோம். கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு, 10 தவணைகளாக கட்டணம் செலுத்த அறிவுறுத்தி உள்ளோம். இருந்தும், பலர் இணைப்பு எடுக்கவில்லை.

சென்னையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கியும், கழிவுநீர் பிரச்னையால் வாரியத்திற்கு தொடர்ந்து கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதனால், இணைப்பு பெறாமல், கழிவுநீரை வடிகால், கால்வாய், நீர்நிலைகள், திறந்தவெளிகளில் விடும் கட்டடங்களின், மின் இணைப்பை துண்டிக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்கான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலை மின்வாரியத்திற்கு வழங்கி, இணைப்பு துண்டிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதே முறையை, சென்னையை தொடர்ந்து, ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளிலும் பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அரசியல் நெருக்கடி

மழை இல்லாதபோது, வடிகால்கள் காய்ந்து இருக்க வேண்டும். ஆனால், 95 சதவீத வடிகால்களிலும் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி, தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. சட்டவிரோத இணைப்பை துண்டிக்க சென்றால், அடுத்த சில நிமிடத்தில் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகளிடம் இருந்து, இணைப்பை துண்டிக்கக்கூடாது என, அழைப்பு வருகிறது. இணைப்பு எடுக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுகாதாரத்துறை அதிகாரிகள்.

- நமது நிருபர் -

      Dinamalar
      Follow us