பெண் முதல்வர் ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
பெண் முதல்வர் ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
ADDED : அக் 17, 2025 12:24 AM

மேற்கு வங்கத்தின், மேற்கு வர்தமான் மாவட்டம் துர்காபூரில், தனியார் மருத்துவ கல்லுாரியில் படிக்கும் ஒடிஷாவை சேர்ந்த மாணவி, கடந்த 10ம் தேதி இரவு உணவருந்த சென்றபோது பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார்.
கல்லுாரி வளாகம் அருகே உள்ள வனப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் வாய் திறக்கவில்லை. இது, அங்குள்ள கல்வி நிலையங்கள் மீதான சந்தேகத்தை வலு ப்படுத்துகின்றன.
குற்ற வழக்கு மேற்கு வங்கத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பாதுகாப்பான இடங்களாகக் கருதப்பட்ட கல்லுாரி வளாகங்கள் கூட குற்றங்கள் அரங்கேறும் இடங்களாக மாறியுள்ளன.
என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் தரவுகளின்படி, 2022ல் மேற்கு வங்கத்தில், 34,738 பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
நம் நாட்டில் பதிவான குற்றங்களில் இதுவே அதிகம்.
கடந்த, 2020 முதல், 2024 வரை, கல்வி நிறுவனங்களின் அருகே மாணவியருக்கு எதிரான குற்றச்செயல்களுக்காக மட்டும், 300க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.
கடந்த ஜூன் மாதம், தெற்கு கொ ல்கட்டாவில் உள்ள சட்டக்கல்லுாரி மாணவி, ஆளும் திரிணமுல் காங்., மாணவரணியுடன் தொடர்புடைய முன்னாள் மாணவர் உட்பட மூன்று பேரால் கூட்டு பாலியல் பலா த் காரத்திற்கு ஆளானார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், கொல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
தற்போது ஒடிஷா மாணவியும், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உள்ளார்.
இதுகுறித்து பாலின உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர் அனன்யா சென் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் இயங்கும் பல கல்லுாரி நிர்வாகங்கள், அரசியல் பின்புலம் உள்ள மாணவர் சங்கங்களால் இயக்கப் படுகின்றன.
''குறிப்பாக, ஆளும் திரிணமுல் காங்கிரசின் மாணவரணி, தொடர்ந்து குற்றவாளிகளை பாதுகாப்பதுடன், புகார் செய்வோரை அச்சுறுத்துகிறது ,” என்றார்.
மேற்கு வங்கத்தில் உள்ள பெரும்பாலான கல்லுாரிகளில் பாதுகாப்பு உட்கட்டமைப்புகள் மிகவும் மோசமாக உள்ளன. அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லை என, தொடர் புகார்கள் எழுகின்றன.
பெண்களின் பாதுகாப்பை, மாநில அரசு தலையிட்டு உடனடி யாக உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
விசாரணை குறிப் பாக, கல்லுாரி வளாகங்களில் பாதுகாப்பு உட்கட்டமைப்பை உறுதிப்படுத் துவது, மாணவர் சங்கங்களை ஒழுங்குப் படுத்துதல், விரைவு நீதிமன்றங்களை அமைத்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான அத்துமீறலை விசாரிக்க சார்பற்ற உள் விசாரணை குழுக்களை அமைப்பது போன்ற பரிந்துரைகளை ச மூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பெ ண் முதல்வர் ஆளும் மேற்கு வங்கத் தில் கல்வி வளாகங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற் படுத்த மாநில அரசு முன் வருமா? அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்குள் மம்தா தலைமையிலான அரசு விழித்துக் கொள்ளுமா?
- நமது சிறப்பு நிருபர் -: