வளைக்கரங்கள் வசம் 37!: வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போகும் பெண் சக்தி
வளைக்கரங்கள் வசம் 37!: வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போகும் பெண் சக்தி
ADDED : பிப் 04, 2024 03:17 AM

தமிழகத்தில் மொத்தம்உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 37ல் பெண் வாக்காளர்களே அதிகம். அவற்றில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக, பெண்களே திகழ்கின்றனர். இந்த 37லும், நீலகிரி லோக்சபா தொகுதியில், ஆண்களை விட அதிகமாக 52,776 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண்களுக்கு ஆறுதலாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகள் இரண்டு மட்டும் இருக்கின்றன. இங்கே மட்டுமே பெண்களை விட, ஆண்வாக்காளர்கள் அதிகம்.
இந்த விஷயம் அறிந்த கட்சிகள் எல்லாமே, பெண் வாக்காளர்களை கவர, என்னென்ன செய்யலாம் என யோசித்து வருகின்றன.
மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கான இலவச பஸ் பயணம் போன்றவை, இத்தேர்தலில் தங்களுக்கு கை கொடுக்கும் என்பது, தி.மு.க.,வினரின் நம்பிக்கை.
பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டி, ஆளும் கட்சிக்கு எதிராக பெண்களை திருப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிடுகின்றன.
இம்முறை பெண்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்க பெரிய கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
பெண்கள் அதிகம் உள்ள தொகுதிகள்
தொகுதி - கூடுதலாக உள்ள பெண்கள் எண்ணிக்கை
திருவள்ளூர் - 35,787
வட சென்னை - 34,240
தென் சென்னை - 20,182
மத்திய சென்னை - 14,582
ஸ்ரீபெரும்புதுார் - 19,410
காஞ்சிபுரம் - 40,620
அரக்கோணம் - 41,438
வேலுார் - 46,091
திருவண்ணாமலை - 23,669
ஆரணி - 26,683
விழுப்புரம் - 13,226
கள்ளக்குறிச்சி - 21,065
சேலம் - 2,018
நாமக்கல் - 35,340
ஈரோடு - 47,464
திருப்பூர் - 25,243
நீலகிரி - 52,776
கோவை - 22,539
பொள்ளாச்சி - 49,351
திண்டுக்கல் - 46,376
கரூர் - 41,602
திருச்சி - 38,595
பெரம்பலுார் - 43,216
கடலுார் - 24,640
சிதம்பரம் - 11,583
மயிலாடுதுறை - 24,590
நாகப்பட்டினம் - 28,678
தஞ்சாவூர் - 46,513
சிவகங்கை - 51,235
மதுரை - 27,795
தேனி - 27,896
விருதுநகர் - 35,177
ராமநாதபுரம் - 11,953
துாத்துக்குடி - 31,476
தென்காசி - 31,664
திருநெல்வேலி - 37,570
கன்னியாகுமரி - 1,996
***
* கூடுதலாக ஆண்கள் உள்ள தொகுதிகள்:
கிருஷ்ணகிரி - 5,170
தர்மபுரி - 17,200