sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ஆயுஷ்மான் பாரத்: சுகாதார சேவையில் ஒரு மைல்கல்: ஜெகத் பிரகாஷ் நட்டா

/

ஆயுஷ்மான் பாரத்: சுகாதார சேவையில் ஒரு மைல்கல்: ஜெகத் பிரகாஷ் நட்டா

ஆயுஷ்மான் பாரத்: சுகாதார சேவையில் ஒரு மைல்கல்: ஜெகத் பிரகாஷ் நட்டா

ஆயுஷ்மான் பாரத்: சுகாதார சேவையில் ஒரு மைல்கல்: ஜெகத் பிரகாஷ் நட்டா

1


ADDED : செப் 23, 2024 01:50 AM

Google News

ADDED : செப் 23, 2024 01:50 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டமான, ஏ.பி.பி.எம்.ஜெ.ஏ.ஒய்.,யின், ஆறாம் ஆண்டு நிறைவை நாம் கொண்டாடும் வேளையில், இது மிகுந்த பெருமிதம் மற்றும் பிரதிபலிப்புக்குரிய தருணமாகும். பிரதமர் மோடியின் தொலைநோக்குடன் கூடிய தலைமையின் கீழ், 2018 செப்டம்பரில் துவங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், உலகின் மிகப்பெரிய சுகாதார சேவை திட்டங்களில் ஒன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது.

அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக மிகவும் நலிந்த பிரிவினருக்கும் தரமான சுகாதார சேவைகளை வழங்குவது என்ற, மோடி அரசின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

இத்திட்டம், கடந்த ஆறு ஆண்டுகளில், லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களை குணமாக்கி இருப்பதுடன், பல நோயாளிகளுக்கு உயிர்காக்கும் சிகிச்சையாகவும் அமைந்துள்ளது.

மருத்துவ சிகிச்சை


மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவது என்ற, பகிர்ந்து கொள்ளப்பட்ட இலக்குடன் தேசம் ஒருங்கிணைந்தால், எந்தளவிற்கு சாதிக்க முடியும் என்பதற்கு, இத்திட்டம் மிகச்சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முக்கிய நோக்கம் எளிமையானது; ஆனால், ஆழமானது. நிதி நிலைமை அடிப்படையில், எந்த ஒரு இந்தியருக்கும், மருத்துவ சிகிச்சை மறுக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதாகும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில், ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற உதவும் இத்திட்டம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், நாட்டிலுள்ள தலைசிறந்த மருத்துவமனைகளில் கட்டணமின்றி, தரமான மருத்துவ சிகிச்சை பெற வகை செய்துள்ளது.

அடுத்ததாக, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அவர்களது சமூக-, பொருளாதார நிலை எப்படி இருந்தாலும், அவர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்களை நீட்டிப்பது என, மத்திய அரசு சமீபத்தில் எடுத்த முடிவு, மதிநுட்பம் வாய்ந்த முடிவாகும்.

இதற்கு முன், நம் சுகாதார சேவை பணியாளர்களான, அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயல்பாட்டாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களின் குடும்பத்தினரும், இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதய அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று சிகிச்சை, சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோய் போன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகள் உட்பட, 1,900-த்துக்கும் மேற்பட்ட சிகிச்சைகளை இத்திட்டத்தின் கீழ் பெற வகை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, 55 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், இத்திட்டத்தில் சேர தகுதி பெற்றுள்ள நிலையில், 7.5 கோடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டு உள்ளது. இது, குறிப்பிடத்தக்க சாதனையே.

முழுமையான சேவை


ஆயுஷ்மான் பாரத் என்பது, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது மட்டுமல்ல.

இத்திட்டத்துடன், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திரான, ஏ.ஏ.எம்.,களை உருவாக்கியதன் வாயிலாக, ஆரம்பநிலை சுகாதார சேவைகளை வலுப்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை, 1.73 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் ஏற்படுத்தப்பட்டு, நோய் கண்டறிதல் மற்றும் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுவதுடன், பொதுவான நோய்களுக்கும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட பாதிப்புகளுக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சாதனைகளை கொண்டாடும் அதேவேளையில், எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல, நாம் தொடர்ந்து வலுப்படுத்தி, முழுமையான, குறைந்த செலவிலான மற்றும் தரமான சுகாதார சேவை வழங்கும் இந்தியாவின் பயணத்தில், இத்திட்டம் தொடர்ந்து முன்னணியில் இருக்கும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில், நாடு வளம் பெறுவதற்கு, நாட்டின் ஆரோக்கியம் அடித்தளமாக இருக்கும் என்பது, என் உறுதியான நம்பிக்கை.

கருணை உள்ளம்


மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், அவர்களால் நாட்டின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

அந்த வகையில், ஆரோக்கியமான, வலிமையான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில், ஆயுஷ்மான் பாரத் முக்கிய பங்கு வகிக்கும்.

இத்திட்டத்தின் வெற்றியானது, அரசு, சுகாதார சேவை வழங்குவோர் மற்றும் மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த மோடி அரசு தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஆறாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில், எளிதில் அணுகக்கூடிய மற்றும் கருணை உள்ளத்துடன் கூடிய சுகாதார நடைமுறையை உருவாக்குவதில், எங்களது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

வருங்கால சந்ததியினருக்காக, ஆரோக்கியமான இந்தியாவை படைக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

ஜெய்ஹிந்த்!

சுகாதார சேவை வழங்கும் கட்டமைப்புகளை பெருமளவுக்கு ஏற்படுத்தியிருப்பது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சிறப்புகளில் ஒன்று. தற்போதைய நிலையில், இந்தியா முழுதும் உள்ள 13,000 தனியார் மருத்துவமனைகள் உட்பட 29,000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், இத்திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

நோயாளிகள் தங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமின்றி, நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற முடியும்.

இந்த மிகப்பெரிய சிகிச்சை முறைக்கு உதவியாக, வெளிப்படைத்தன்மை, திறமை மற்றும் சிகிச்சை கட்டணத்தை விரைவாக செலுத்துவதை உறுதி செய்யக்கூடிய வலுவான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

29,000 மருத்துவமனைகள்








      Dinamalar
      Follow us