sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

முடிந்த பணிகளுக்கு விளம்பர பலகை; ரூ.500 கோடி செலவிட்ட ஊரகத்துறை

/

முடிந்த பணிகளுக்கு விளம்பர பலகை; ரூ.500 கோடி செலவிட்ட ஊரகத்துறை

முடிந்த பணிகளுக்கு விளம்பர பலகை; ரூ.500 கோடி செலவிட்ட ஊரகத்துறை

முடிந்த பணிகளுக்கு விளம்பர பலகை; ரூ.500 கோடி செலவிட்ட ஊரகத்துறை

2


UPDATED : ஜன 12, 2026 05:50 AM

ADDED : ஜன 12, 2026 04:49 AM

Google News

UPDATED : ஜன 12, 2026 05:50 AM ADDED : ஜன 12, 2026 04:49 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த விபரங்களை, பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக விளம்பர பலகைகள் அமைக்க, 500 கோடி ரூபாய் செலவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்ப டுத்தியுள்ளது.

தமிழகத்தில், 12,500க்கும் அதிகமான ஊராட்சிகள் உள்ளன. கடந்த 2021ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், 'ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப் படும்' என்று அறிவித்தது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு, ஓராண்டுக்கு 35 லட்சம் ரூபாய் வரை ஒதுக்கப்படுகிறது.

சாலை வசதி

இந்த நிதியில், நீர்நிலைகள் புனரமைப்பு, சமத்துவ சுடுகாடு அமைப்பு, தெருவிளக்குகள், குடிநீர், சாலை வசதிகள், நுாலக கட்டடங் கள், பள்ளி கட்டடங்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள், சேமிப்பு கிடங்குகள் கட்டுதல், சந்தைகள் அமைத்தல்,கதிரடிக்கும் களம், மீன் உலர்த்தும் கூடம், காளான் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு கூடம் கட்டுதல், பேருந்து நிலைய வசதிகள் மேம்பாடு போன்ற பணிகளும் நடந்து வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், 2021 - 22ல், 2,657 ஊராட்சிகளுக்கு 1,455 கோடி ரூபாய்; 2022 - 23ல், 2,544 ஊராட்சி களுக்கு 1,155 கோடி ரூபாய்; 2023 - 24ல், 2,504 ஊராட்சிகளுக்கு, 1,148 கோடி ரூபாய்; 2024 - 25ல், 2,483 ஊராட்சிகளுக்கு, 1,147 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நடப்பாண்டு, 2,329 ஊராட்சிகளில், 1,087 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2021 முதல் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து, தற்போது விளம்பர பலகைகள் அமைக்கும் பணியில் ஊரக வளர்ச்சி துறை ஈடுபட்டுள்ளது.

சர்ச்சை

இதற்காக, 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் அரசு நிதியை விளம்பரப் பலகை அமைக்க வாரி இறைப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், எந்தெந்த ஊராட்சிகளில் என்னென்ன பணிகள் நடந்துள்ளன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக விளம்பர பலகைகள் அமைக்கப்படுகின்றன.

இதில், திட்டம், நிதி ஒதுக்கீடு என, அனைத்து விபரங்களும் இடம்பெறும். விளம்பர பலகைகள் மட்டுமின்றி சுவர் களிலும் விளம்பரம் எழுதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us