தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ பீஹார், தமிழக சட்டசபை தேர்தல் பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

பீஹார், தமிழக சட்டசபை தேர்தல் பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்

பீஹார், தமிழக சட்டசபை தேர்தல் பா.ஜ., பொறுப்பாளர்கள் நியமனம்


ADDED : செப் 26, 2025 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2025 12:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஹாரில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலுக்கான பா.ஜ., பொறுப்பாளராக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பீஹாரில் உள்ள 243 தொகுதிகளுக்கு, அக்., - நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சிறிது காலமே உள்ள நிலையில், பீஹாரில் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. பா.ஜ., - காங்., கூட்டணிகளை தவிர, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் க ளத்தில் குதித்துள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.,வின் பொறுப்பாளராக, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய கல்வி அமைச்சருமான தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர், இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

விரைவில் பீஹாருக்கு செல்லும் இவர்கள், தேர்தல் உத்தி, பிரசாரம், தேர்தல் அறிக்கை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளிடம் கலந்து பேசி முடிவு செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., பொறுப்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பூபேந்திர யாதவ்; இணை பொறுப்பாளராக திரிபுரா எம்.பி., பிப்லப் தேப் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., பொறுப்பாளராக, அக்கட்சியின் லோக்சபா எம்.பி., பைஜயந்த் பாண்டா; இணை பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் முரளிதர் மோகல் நியமிக்கப்பட்டுள்ளனர்

- நமது டில்லி நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us