ADDED : ஜூன் 09, 2024 12:47 AM

புதுடில்லி: தமிழகத்தில் பா.ஜ., காலுான்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்திற்கென தனி கவனம் செலுத்தி, பிரதமர் மோடி உட்பட பா.ஜ.,வின் சீனியர் தலைவர்கள் பல முறை தமிழகம் வந்து பிரசாரம் செய்தனர். அப்படியிருந்தும் ஏன் இப்படி? இது குறித்து, 6ம் தேதி டில்லியில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பா.ஜ.,வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் கூட்டம் நடைபெற்றது; இதில், சீனியர் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களும் பங்கேற்றனர். அதில், 'தமிழகத்தில் எந்த இடங்களில் பா.ஜ.,விற்கு அதிக ஓட்டுகள் கிடைத்தது, எங்கு பின்னடைவு ஏற்பட்டது' என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தேர்தல் சமயத்தில் பா.ஜ.,வில் நடந்த பண பட்டுவாடா மோசடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எதிரான புகார்கள் என, பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் அலசப்பட்டதாம்.