தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/திமுக பாணியில் கவனிப்பு; மேலிடத்திடம் பாஜ வலியுறுத்தல்

திமுக பாணியில் கவனிப்பு; மேலிடத்திடம் பாஜ வலியுறுத்தல்

திமுக பாணியில் கவனிப்பு; மேலிடத்திடம் பாஜ வலியுறுத்தல்


UPDATED : பிப் 08, 2026 08:45 AM

ADDED : பிப் 08, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2026 08:45 AM ADDED : பிப் 08, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'போர்க்களத்தில் எதிரியை வீழ்த்த, அவர்கள் எடுக்கும் ஆயுதத்தையே நாமும் எடுக்க வேண்டும்; அதேபோல் சட்டசபை தேர்தலில், தி.மு.க., பாணியில் 'கவனிப்பு' வேலைகளை செய்தால், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி உறுதி செய்யப்படும்' என, மேலிடத் தலைவர்களிடம் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.



இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி, சட்டசபை, லோக்சபா என, எந்த தேர்தலாக இருந்தாலும், தி.மு.க.,வில் 'பூத்' கமிட்டி உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், வார்டு செயலர், பகுதி செயலர் மற்றும் நிர்வாகிகளுக்கு தனித்தனியே 'கவனிப்பு' நடக்கிறது. அவர்களும் தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபடுகின்றனர். தங்கள் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களை, ஒரு ஓட்டு, ஒரு குடும்பம் என்ற வீதத்தின் அடிப்படையில், ஓட்டுப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன், 'கவனிப்பு' செய்கின்றனர்.

வாக்காளர்களுக்கு 'கவனிப்பு' செய்யும் போது, பறக்கும் படையினரிடம் புகார் கொடுத்தால், அவர்கள் வந்ததும் கவனிப்பு முடங்குகிறது. அந்த சமயத்தில், கவனிப்பு கிடைக்காத வாக்காளர்கள், அதை தடுத்த கட்சியினரிடம், 'எங்களுக்கு தருவதை, நீங்கள் ஏன் நிறுத்த வேண்டும்? அவர்கள் கொடுப்பது போல் நீங்களும் கொடுங்கள். 'கவனிப்பு செய்தாலும், ஓட்டு யாருக்கு போட வேண்டும் என்பதை, நாங்கள் தான் முடிவு செய்வோம்' என கேட்டு பிரச்னை செய்கின்றனர்.

எனவே, தமிழகத்தில் தேர்தல் சமயத்தில், 'கவனிப்பு' என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. தற்போது, தி.மு.க., மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதோடு, ஆட்சியிலும் மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே, போர்க்களத்தில் எதிரி எடுக்கும் ஆயுதத் தையே, நாமும் எடுக்க வேண்டும்; அப்போ து தான் வெற்றி கிடை க்கும். அதே போல் வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., பாணியில் 'கவனிப்பு' வேலைகளை செய்ய, பா.ஜ., தயங்கக் கூடாது.

அதற்கு, மேலிடம் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என, மே லிடத் தலைவர்களிடம் தெரி விக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு மாதம் குடும்பத்தை மறந்து, தேர்தல் பணியில் ஈடுபடும் முழு நேர பா.ஜ., தொண்டர்களின் குடும்ப செலவை, மேலிடம் ஏற்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us