தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ கறுப்பு ஆடு குறித்து பா.ஜ., விசாரணை

கறுப்பு ஆடு குறித்து பா.ஜ., விசாரணை

கறுப்பு ஆடு குறித்து பா.ஜ., விசாரணை


UPDATED : ஜூன் 07, 2025 04:14 AM

ADDED : ஜூன் 07, 2025 04:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2025 04:14 AM ADDED : ஜூன் 07, 2025 04:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் சொல்லப்படும் முக்கிய தகவல்கள், தி.மு.க., தலைமைக்கு தெரிவது எப்படி என, பா.ஜ., மேலிடம் விசாரித்து வருகிறது.

தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:


தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, டில்லியில் இருந்து தமிழக பா.ஜ.,வுக்கு தகவல்கள் தரப்படுகின்றன.

இதற்காக, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன், 'ஜூம் மீட்டிங்' வாயிலாக, ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த விபரங்களை, கட்சியின் நிர்வாகிகள் தங்களின் ஆதரவாளர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தத் தகவல்கள், தி.மு.க., தலைமைக்கு செல்கின்றன.

இதுகுறித்து, பா.ஜ., மேலிடத்திற்கு புகார்கள் சென்றுள்ளன. எனவே, இந்த செயலில் யார் ஈடுபடுகின்றனர் என்பதை, மத்திய உளவுத்துறை வாயிலாக, கட்சி மேலிடம் சேகரித்து வருகிறது. விரைவில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us