தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/பாஜ தலைமையை விமர்சிக்கும் மேற்கு வங்க எம்பி

பாஜ தலைமையை விமர்சிக்கும் மேற்கு வங்க எம்பி

பாஜ தலைமையை விமர்சிக்கும் மேற்கு வங்க எம்பி


UPDATED : நவ 30, 2025 07:15 AM

ADDED : நவ 30, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2025 07:15 AM ADDED : நவ 30, 2025 01:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது சிறப்பு நிருபர்

மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர், அபிஜித் கங்கோபாத்யாயா. கடந்தாண்டு மார்ச்சில் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.,வில் சேர்ந்தார். கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தின் டம்லுக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும்; மம்தாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எம்.பி.,யானார். ஆனால், இப்போது ஏன் பா.ஜ.,வில் சேர்ந்தோம் என வெறுத்துப் போயுள்ளாராம். அடுத்தாண்டு, ஏப்ரல் - -மே மாதங்களில் தமிழகத்துடன் மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், 'மம்தாவை நீக்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடவில்லை' என கூறியதுடன், பா.ஜ., தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளார் அபிஜித்.

'வரும் சட்டசபை தேர்தலில் மம்தாவை பா.ஜ., தோற்கடிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி அரசு, உளவுத்துறை மற்றும் தேர்தல் ஆணையம்' என பேசி, பா.ஜ.,வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அபிஜித்.

'பா.ஜ.,வினர் பெங்காலிகளை எதிர்த்து அரசியல் செய்கின்றனர் என, சென்டிமென்டாக பேசி வருகிறார் மம்தா. ஆனால், பா.ஜ.,வோ, உள்ளூர்காரர்களை விடுத்து வடமாநிலத்தவரை மேற்கு வங்கத்தில் களம் இறக்கி வருகிறது. மம்தாவின் அரசு, ஊழலில் திளைத்தாலும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது' என பேசியுள்ளார் அபிஜித்.

பீஹார் வெற்றியை தொடர்ந்து தமிழகம், மேற்கு வங்கம் தான் அடுத்த குறி என பிரதமர் மோடி பேசியுள்ள நிலையில், பா.ஜ., - எம்.பி., அபிஜித் கங்கோபாத்யாயாவின் விமர்சனம், கட்சியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us