வாரிய தலைவர் பதவியா; மீண்டும் சீட்டா? ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் குழப்பம்
வாரிய தலைவர் பதவியா; மீண்டும் சீட்டா? ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் குழப்பம்
ADDED : மே 26, 2026 05:36 AM

சென்னை: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த மூவருக்கு, எந்த பதவி வேண்டும் என்பதை முடிவு செய்ய, அவகாசம் தரப்பட்டுள்ளதாக, த.வெ.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து, த.வெ.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் வெற்றிபெற்ற பெருந்துறை - ஜெயகுமார், மதுராந்தகம் - மரகதம் குமரவேல், தாராபுரம் - சத்ய பாமா ஆகியோர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் 16 பேரிடம், தேர்தலுக்கு முன்பாகவே, அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு நடத்தினார். அப்போது, யாருமே வர தயாராக இல்லை.
தற்போது, அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பு, மீண்டும் பேச்சு நடத்தியது. தேர்தலில் செலவழித்த பணத்தை வழங்க, த.வெ.க., மேலிடம் ஒப்பு கொண்டுள்ளது. இடைத்தேர்தலில், அதே தொகுதியில், 'சீட்' வேண்டுமா அல்லது வாரிய தலைவர் பதவி வேண்டுமா என கேட்கப்பட்டது.
அதற்கு, 'மீண்டும் 'சீட்' வேண்டும்; வெற்றி பெற்றால், அமைச்சர் பதவி வேண்டும்' என மூவரும் கோரினர். அதை, த.வெ.க., மேலிடம் ரசிக்கவி ல்லை. பேச்சு நடக்கும்போது, கோரிக்கையை நிராகரித்தால், மனம் மாறிவிடுவர் என்பதால், இடைத்தேர்தல் நெருக்கத்தில், 'சர்வே' அடிப்படையில் 'சீட்' கொடுப்போம் என, மேலிடம் கூறி விட்டது.
இதனால், 'சீட்' கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில், இப்போதே வாரிய தலைவர் பதவி வாங்குவது குறித்து மூவரும் யோசித்தனர். இதையடுத்து, யோசித்து சொல்லுமாறு த.வெ.க., தலைமை கூறிவிட்டது. அ.தி.மு.க.,வில் இரு முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏழு எம்.எல்.ஏ.,க்களிடம் பேச்சு நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
