sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கோவையில் அதிகாரிகள் கொண்டாடும் 'லஞ்சத்திருவிழா'; தள்ளுபடியும் உண்டாம்... அங்கே 30 % இங்கே 22 %

/

கோவையில் அதிகாரிகள் கொண்டாடும் 'லஞ்சத்திருவிழா'; தள்ளுபடியும் உண்டாம்... அங்கே 30 % இங்கே 22 %

கோவையில் அதிகாரிகள் கொண்டாடும் 'லஞ்சத்திருவிழா'; தள்ளுபடியும் உண்டாம்... அங்கே 30 % இங்கே 22 %

கோவையில் அதிகாரிகள் கொண்டாடும் 'லஞ்சத்திருவிழா'; தள்ளுபடியும் உண்டாம்... அங்கே 30 % இங்கே 22 %

2


UPDATED : நவ 19, 2024 06:14 AM

ADDED : நவ 18, 2024 10:53 PM

Google News

UPDATED : நவ 19, 2024 06:14 AM ADDED : நவ 18, 2024 10:53 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டு ஹாலில் அமர்ந்து, மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

காபி கோப்பையை நீட்டிய சித்ரா, ''என்னத்த நோண்டிக்கிட்டு இருக்கே. 'சிட்டி ரவுண்ட்ஸ்' போகணும்; சீக்கிரம் கெளம்பு,'' என, அவசரப்படுத்தினாள்.

காபியை உறிஞ்சிய படியே... ''அக்கா... நம்மூர் ஏர்போர்ட்டுல கதர்ச்சட்டைக்காரங்க ஒருத்தருக்கு ஒருத்தர் மோதிக்கிட்டாங்களாம். சமூக வலைதளத்துல சின்ன... சின்னதா வீடியோ வந்துருக்கு. அதை பார்த்துட்டு இருந்தேன்,'' என்றாள் மித்ரா.

''மித்து... காங்கிரஸ் கட்சியில கோஷ்டிக்கு பஞ்சமில்லை. போன மாசமே கூட்டம் நடத்தி, தீர்மானம் நிறைவேத்தி, தலைமைக்கு அனுப்புனாங்க; எந்த நடவடிக்கையும் எடுக்காம கெடப்புல போட்டுட்டாங்க. இப்போ, தலைமை நிர்வாகி நம்மூருக்கு வந்திருந்த சமயத்துல சீண்டி விட்டு, வேடிக்கை பார்த்திருக்காங்க போலிருக்கு,''

''அரசியல்ல இதெல்லாம் சகஜம்னு கடந்து போயிடணும் போலிருக்கே,'' என, சலித்துக் கொண்டாள் மித்ரா.

ஆளுங்கட்சியினர் 'அப்செட்' ''மித்து... ஆளுங்கட்சிக்காரங்களே அப்படித்தான் இருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நம்மூருக்கு வந்த ஹெல்த் மினிஸ்டர், ஏ.டி.எம்.கே.,வுல இருந்து தி.மு.க.,வுக்கு தாவுன முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டுக்கு போயி குசலம் விசாரிச்சிருக்காரு. இவரு, தி.மு.க., வேட்பாளர் தேர்தல்ல தோக்குறதுக்கு காரணமா இருந்தவராம். அவரோட வீட்டுக்கு போயி விசாரிச்சிருக்காரு; கட்சி வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு, உடல் நலம் சரியில்லாம, சித்தநாயக்கன்பாளையம் சீனிவாசன் உள்ளிட்ட எத்தனையோ ஏழை சீனியர் உடன்பிறப்புகள் இருக்காங்க; அவுங்களை பார்க்காம தவிர்த்தது கட்சியில அதிருப்தியை ஏற்படுத்தி இருக்குதாம்...''


உடன்பிறப்புகள் கலக்கம்

''கரன்சியை லட்சக்கணக்குல சுருட்டுன உடன்பிறப்புகள் கலக்கத்துல இருக்காங்களாமே...''

''அதுவா... லோக்சபா தேர்தல் சமயத்துல, பூத் வாரியா பணம் பட்டுவாடா செஞ்சிருக்காங்க. அதுல, லட்சக்கணக்குல கரன்சியை சுருட்டுன கவுண்டம்பாளையம், சிங்காநல்லுார் தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலக்கத்துல இருக்காங்களாம். ஏகப்பட்ட பூத்கள்ல தி.மு.க.,வுக்கு ஓட்டு சரிஞ்சிருக்கு. பணத்தை லவட்டுனவங்க எப்போ... என்ன நடக்குமோன்னு பீதியில இருக்காங்க...''

''காரமடை ஏரியாவுல ஆளுங்கட்சிக்குள்ள புகைச்சல் ஓடிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேனே...''

''ஆமா... மித்து! உண்மை தான். ஒன்றிய நிர்வாகி ஒருத்தரு, தனது மனைவியை மேட்டுப்பாளையம் தொகுதியில களமிறக்கறதுக்கு காய் நகர்த்திட்டு வர்றாராம். அரசியலில் பெருசா அனுபவம் இல்லாத அவருக்கு, அறங்காவலர் குழுவிலும் பதவி கொடுத்திருக்காங்க; சீனியர்களை ஓரங்கட்டிட்டு, கட்சி சார்ந்த நிகழ்ச்சியில முன்னிலைப் படுத்துறாங்களாம். பணம் இருந்தா போதுமா... செல்வாக்கு வேணாமா; அனுபவம் வேணாமான்னு உடன்பிறப்புகளில் சீனியர்கள் சீறிட்டு இருக்காங்க... கட்சி தலைமையோ... 'சைலண்ட்'டா இருக்குதாம்..''

இலைக்கட்சியினர் கொந்தளிப்பு ''இலைக்கட்சியை சேர்ந்தவங்க, 'மாஜி'யிடம் கொந்தளிச்சிட்டாங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள் மித்து.


''ஆமாப்பா... ஏ.டி.எம்.கே., - ஐ.டி., - விங்க் ஆலோசனை கூட்டம் நடத்துனாங்க. 'மாஜி' அமைச்சர் வேலுமணி முன்னிலையில நடந்துச்சு. கருத்துக்களை சொல்லுங்கன்னு சொன்னதும், ஆளாளுக்கு புகார்களை அடுக்கிட்டாங்களாம். 'போட்டோ எடுக்கறதுக்கும்; வீடியோ எடுக்கறதுக்கும் மட்டுமே எங்களை வச்சுக்கிறாங்க; எங்களை நிர்வாகிகள் மதிக்கிறதே இல்லீங்க... கருவேப்பிலை மாதிரி 'யூஸ்' பண்ணிட்டு, துாக்கி வீசிடுறாங்க'ன்னு புலம்பித் தள்ளிட்டாங்களாம்...''

''பொறுமையா கேட்ட மாஜி அமைச்சர், 'ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் ஐ.டி., - விங்க்ல இருந்து ரெண்டு பேரை சேர்க்கணும்; அவுங்கள மரியாதையா நடத்தணும்னு 'அட்வைஸ்' பண்ணி, சமாதானம் செஞ்சு வச்சிருக்காராம்...''

மெய்மறந்த ஸ்டூடன்ஸ் ''கமிஷனர் பேச்சைக் கேட்டு, ஸ்டூடன்ஸ் அத்தனை பேரும் மெய்மறந்துட்டாங்களாமே...''


''அதுவா... அந்த நிகழ்ச்சி ரொம்பவும் சென்டிமென்ட்டா இருந்துச்சாம்... கொஞ்ச நாளைக்கு முன்னாடி... ஜி.சி.டி., காலேஜ்ல பயிலரங்கு நடந்திருக்கு; சிறப்பு விருந்தினரா கார்ப்பரேஷன் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கலந்துக்கிட்டாரு. பொருளாதார ரீதியா ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சது; மும்பைக்கு ரயில்ல போறதுக்கு டிக்கெட் எடுத்தும் 'சீட்' கெடைக்காம, 'டாய்லெட்'டுக்கு பக்கத்துல படுத்துட்டு போனதுன்னு... ஐ.ஏ.எஸ்., ஆகறதுக்கு எவ்வளவு சிரமத்தை சந்திச்சாருன்னு வெளிப்படையா பேசியிருக்காரு. ஸ்டூடன்ஸ் 'சைலண்ட்'டா இருந்து, பேச்சைக் கேட்டிருக்காங்க...'' என்றபடி, நகர் வலம் செல்வதற்கு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

வீட்டை காலி செய்ய நோட்டீஸ் ஜோல்னா பையை தோளில் போட்டுக் கொண்டு, பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா. ''கார்ப்பரேஷன் காமக்கொடூரன் மேல என்ன நடவடிக்கை எடுத்துருக்காங்கன்னு விசாரிச்சீங்களா...'' என, கேட்டாள்.


''கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் விவகாரத்தை பத்தி தானே கேக்குறே. சிறுமியை பாலியல் வன்மம் செய்த கார்ப்பரேஷன் ஊழியரை 'டிஸ்மிஸ்' செய்யணும்; அரசு குடியிருப்புல இருந்து வெளியேத்தணும்னு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு கொடுத்திருக்காங்க. அதுல, வீட்டை காலி செய்யச் சொல்லி, ஹவுசிங் போர்டு ஆபீஸ்ல இருந்து நோட்டீஸ் அனுப்பி இருக்காங்களாம்,''

''போலீஸ் தரப்புல எப்.ஐ.ஆர்., பதிவு செஞ்சா துறை ரீதியா 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கறதுக்கு கார்ப்பரேஷன் தரப்புல தயாரா இருக்காங்களாம். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க, சிறுமியின் எதிர்காலத்தை நினைச்சு அமைதியா இருக்காங்க. இந்த விஷயத்துல, கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் 'தில்'லா நடவடிக்கை எடுக்காம இருக்கறது, நேர்மையான அலுவலர்களை சங்கடப்படுத்தி இருக்குது...''

கல்லா கட்டும் கவுன்சிலர் ''ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருத்தர் கல்லா கட்டுறதுல குறியா இருக்காராமே...''


''அதையேன் கேக்குறே... கவுன்சிலர்களை பத்தி பேச ஆரம்பிச்சா... விடிஞ்சிடும்... எருக் கம்பெனி ஏரியாவுல சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகள், ஆவின் பூத், மண் பானை கடைகளை ஹைவேஸ் டிபார்ட்மென்ட்டுல இருந்து எடுத்தாங்க. அந்த இடத்துல 'ரவுண்டானா' அமைக்கப் போறதா சொன்னாங்க.

ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு, 'நானிருக்கேன்; பாத்துக்கிறேன்... நீங்க கடை வச்சுக்குங்க... மாசம் தவறாம ஒவ்வொரு கடைக்காரங்களும், மூவாயிரம் தரணும்'னு பேசி முடிச்சிருக்காராம். இப்போ, மறுபடியும் ரோட்டை ஆக்கிரமிச்சு கடைகளை போட ஆரம்பிச்சிட்டாங்க. மொத்தம், 16 கடைகள் வந்துருக்குது. இந்த பிரச்னைக்கு யாரு தீர்வு காணுறதுன்னு தெரியாம கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ்சும், ஹைவேஸ் டிபார்ட்மென்ட் ஆபீசர்ஸ்சும் தவியாய் தவிச்சுட்டு இருக்காங்க...''

காலேஜ் 'லிஸ்ட்'


''அதெல்லாம் இருக்கட்டும்... போலீஸ் தரப்புல இருந்து உயர் கல்வித்துறைக்கு கஞ்சா புழங்குற காலேஜ் 'லிஸ்ட்' அனுப்பி இருக்காங்களாமே... உண்மை தானா...''

''யெஸ்... நீ சொல்றது கரெக்ட்டுதான்! நானும் விசாரிச்சேன். சில லிமிட்டுக்குள்ள இருக்கற காலேஜ்ல படிக்கற ஸ்டூடன்ஸ் மத்தியில போதைப்பழக்கம் அதிகமாயிருக்குதாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஸ்டூடன்சையே போலீஸ்காரங்க 'அரெஸ்ட்' பண்ணுனாங்க... முன்ன மாதிரி இல்லாம... இப்போ... காலேஜ் வளாகத்துக்குள்ளேயே... கஞ்சா சேல்ஸ் பட்டைய கெளப்புதாம்... என்ன செய்றதுன்னு தெரியாம... போலீஸ்காரங்க தலையை பிய்ச்சுக்கிறாங்களாம்,''

''ஸ்டூடன்ஸ்சை அரெஸ்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்பினாலும் ஜாமின்ல வெளியே வந்து, காலேஜ்க்கு போயி, மறுபடியும் அதே வேலைய செய்றாங்களாம்... இந்த விஷயத்துல காலேஜ் மேனேஜ்மென்ட் சைடுல பெருசா எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லையாம். அதனால, போதை பொருள் வழக்குல சிக்குற ஸ்டூடன்ஸ், பெற்றோர், காலேஜ் நிர்வாகத்தை கூப்பிட்டு, 'கவுன்சிலிங்' கொடுக்கறதுக்கு 'பிளான்' பண்ணியிருக்காங்க...''

''அப்புறம்... கஞ்சா புழக்கம்... சேல்ஸ் பண்ற ஸ்டூடன்ஸ் படிக்குற காலேஜ் லிஸ்ட் எடுத்து, உயர் கல்வித்துறை கவனத்துக்கு போலீஸ்காரங்க அனுப்பியிருக்காங்க. போதை பொருள் புழக்கம் அதிகமா இருக்குற காலேஜ் நிர்வாகம் மீது வழக்கு பைல் செஞ்சா மட்டுமே கட்டுப்படுத்த முடியும்னு போலீசார் நினைக்கிறாங்க...''

லஞ்சத்துக்கு சலுகை ''லஞ்சம் வாங்குறதிலும் சலுகை கொடுக்குறாங்களாமே...''


''மித்து, கார்ப்பரேஷன் ஆபீசுல டவுன் பிளானிங் செக்சன்ல நடக்குறத தானே கேக்குற. பில்டிங் அப்ரூவல் சம்பந்தமா அப்ளிகேசன் கொடுத்தா... 'பார்ட்டி பண்ட்'டுன்னு ஒரு அமவுன்ட், அப்புறம்... துறையை சேர்ந்த முக்கியப்புள்ளி பெயரை சொல்லி ஒரு அமவுன்ட்டுன்னு, 15 சதவீதம் கேட்குறாங்களாம்... இது தவிர... கார்ப்பரேஷன் சைடுல ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு ரேட் பிக்ஸ் பண்ணியிருக்காங்களாம்... இதுக்கு, 15 சதவீதம்னு, மொத்தம், 30 சதவீதம் லஞ்சத்தொகை கேக்குறாங்களாம்,''

''பதிவு பெற்ற இன்ஜினியர்கள் மூலமா போகாம... 'டவுன் பிளானிங்' செக்சன் ஆபீசர்களிடம் டீலிங் செஞ்சா... லஞ்சத்துல, 8 சதவீதம் தள்ளுபடி செய்றாங்களாம்... 22 சதவீதம் கொடுத்தா போதுமாம்... அதனால... வரைபட அனுமதி வாங்கித் தர முடியாம... பதிவு பெற்ற இன்ஜினியர்கள் புலம்புறாங்க...'' என்றபடி, கார்ப்பரேஷன் ஆபீஸ் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.






      Dinamalar
      Follow us