டி.வி.ராமசுப்பையருக்கு வெண்கல சிலை: பிராமணர் சங்க விழாவில் தீர்மானம்
டி.வி.ராமசுப்பையருக்கு வெண்கல சிலை: பிராமணர் சங்க விழாவில் தீர்மானம்
ADDED : ஏப் 06, 2025 11:57 PM

வடவள்ளி: அகில பாரத பிராமணர் சங்கம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து, மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், அனைத்து மகளிர் சங்கமம் 2025 என்ற விழா, கோவை, வடவள்ளியில் நேற்று நடந்தது.
விழாவில், அகில பாரத பிராமணர் சங்க தேசிய தலைவர் குளத்து மணி, சங்க கொடியை ஏற்றி, விழாவிற்கு தலைமை வகித்தார். விழாவில், அகில பாரத பிராமணர் சங்கம் சார்பில், 'தினமலர்' நிறுவனரும், சுதந்திர போராட்ட தியாகியுமான, டி.வி.ராமசுப்பையர் பிறந்த கன்னியாகுமரி மாவட்டத்தில், அவருக்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என, தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
மேலும், மத்திய அரசு வழங்கிய பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். பிராமணர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதையும், திரைப்படங்கள் தயாரிப்பதையும் கண்டித்து, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை, 2026 சட்டசபை தேர்தலில் வாக்குறுதியாக அளிக்கும் கட்சிக்கு அகில பாரத பிராமணர் சங்கம் ஆதரவளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் தேசிய பொதுச்செயலர் ராமசுந்தரம், மாநில மகளிர் அணி துணை ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

