தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ தமிழகத்தில் 3 ரயில்வே திட்டங்கள்: சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு வாய்ப்பு

 தமிழகத்தில் 3 ரயில்வே திட்டங்கள்: சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு வாய்ப்பு

 தமிழகத்தில் 3 ரயில்வே திட்டங்கள்: சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு வாய்ப்பு

11


ADDED : செப் 10, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

11

ADDED : செப் 10, 2026 06:30 AM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், 10,021 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து ரயில்வே திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், 'பி.எம்., கதி சக்தி' திட்டத்தின் கீழ் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில், மொத்தம் 540 கி.மீ., துாரத்துக்கு 10,021 கோடி ரூபாய் செலவில் ஐந்து திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களின் வாயிலாக, நிலக்கரி, சிமென்ட், இரும்பு, உணவு தானியங்கள் மற்றும் வாகனம் உள்ளிட்ட சரக்குகளை எடுத்து செல்வது எளிதாகும். ஆண்டுக்கு 4.70 டன் கூடுதல் சரக்கு கையாளப்படும். மேலும், பயண நேரம் கணிசமாக குறைவதோடு, கிட்டத்தட்ட 2,121 கிராமங்களை சேர்ந்த 52 லட்சம் மக்கள் இதன் வாயிலாக நேரடியாக பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.

ஐந்து திட்டங்கள்


அரக்கோணம் - ரேணிகுண்டா (3வது மற்றும் 4வது பாதை): 77 கி.மீ., துாரத்துக்கு கூடுதல் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இது திருப்பதி உள்ளிட்ட முக்கிய ஆன்மிக தலங்களுக்கான பயணத்தை எளிதாக்கும்
ஓசூர் - ஓமலூர் (இரட்டை ரயில் பாதை): 147 கி.மீ., துாரத்துக்கு இந்த பாதை அமைக்கப்பட உள்ளது. இது ஒகேனக்கல், மேட்டூர் அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும், ஓசூர் தொழில் நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
சேலம் - கரூர் - திண்டுக்கல் (இரட்டை ரயில் பாதை): 159 கி.மீ., துாரத்துக்கு அமைய உள்ள இந்த வழித்தடம், நாமக்கல், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கான போக்குவரத்தை மேம்படுத்தும்
வைட்பீல்டு - பங்காருபேட்டை (கர்நாடகா): 47 கி.மீ., தொலைவுக்கு கூடுதல் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. கோலார் தங்க வயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இது பயனுள்ளதாக அமையும்
செகந்திராபாத் - காசிப்பேட்டை (தெலுங்கானா): 110 கி.மீ., தொலைவுக்கு புதிய பாதைகள் அமைக்கப்படும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us