sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

நவாஸ்கனிக்கு எதிரான வழக்கு: வாபஸ் பெற பன்னீர்செல்வம் முடிவு

/

நவாஸ்கனிக்கு எதிரான வழக்கு: வாபஸ் பெற பன்னீர்செல்வம் முடிவு

நவாஸ்கனிக்கு எதிரான வழக்கு: வாபஸ் பெற பன்னீர்செல்வம் முடிவு

நவாஸ்கனிக்கு எதிரான வழக்கு: வாபஸ் பெற பன்னீர்செல்வம் முடிவு


ADDED : மார் 11, 2026 05:38 AM

Google News

ADDED : மார் 11, 2026 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நாவஸ்கனி வெற்றியை எதிர்த்த வழக்கை திரும்பப் பெற, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை விட, 1 லட்சத்து, 66,782 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வந்தார்.

தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி, நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் பன்னீர் செல்வம் இரண்டு நாட்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

சமீபத்தில், தி.மு.க.வில் பன்னீர்செல்வம் இணைந்தார். அவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி, பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது நீதிபதி, தேர்தல் கமிஷனை எதிர் மனுதாரராக சேர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய, பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.






      Dinamalar
      Follow us