தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/மீண்டும் வெடித்த காவிரி விவகாரம்: அமைச்சர்கள் - தி.மு.க., காரசாரம்

மீண்டும் வெடித்த காவிரி விவகாரம்: அமைச்சர்கள் - தி.மு.க., காரசாரம்

மீண்டும் வெடித்த காவிரி விவகாரம்: அமைச்சர்கள் - தி.மு.க., காரசாரம்

3


ADDED : ஆக 20, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : ஆக 20, 2026 06:32 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: காவிரி விவகாரம் குறித்து, அமைச்சர் நிர்மல்குமாருக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு இடையே விவாதம் நடந்தது.

சட்டசபையில் நடந்த விவாதம்:



தி.மு.க., - துரை சந்திர சேகரன் : 'கத்தி' படத்தில் எந்த சூழலிலும் விவசாயத்தை கைவிட்டு விடாதீர்கள் என, விஜய் சொன்னார். ஆனால், இன்று தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடியை விவசாயிகள் விட்டு விட்டனர். காவிரி விவகாரத்தில், த.வெ.க., அரசு, ரொம்ப மென்மையாக இருக்கிறது. காங்கிரசையும், பா.ஜ.,வையும் பார்த்து பயப்படாமல் முடிவு எடுங்கள்.

அமைச்சர் ஆனந்த்: தீர்வு காண வேண்டும் என்பதுதான் நோக்கம். முதல்வர் யாரை பார்த்தும் பயப்பட மாட்டார். காவிரியில் கர்நாடக அரசு ஒரு கல்லை கூட வைக்க முடியாது.

அ.தி.மு.க., - பழனிசாமி: காவிரி பிரச்னையில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தொடர்ந்து போராடின; இறுதி தீர்ப்பும் வந்து விட்டது. ஆனால், இப்போது அணை கட்ட கர்நாடகா முயலுவதுதான் பிரச்னை.

அமைச்சர் நிர்மல்குமார்: 1970ல் போட்ட வழக்கை, யார் சொல்லி வாபஸ் பெற்றீர்கள்; 1974ல் ஒப்பந்தம் ஏன் புதுப்பிக்கப்படவில்லை. எதிர்க்கட்சியினர் எவ்வளவு அநாகரிகமாக நடக்கின்றனர் என, நேரடி ஒளிப்பரப்பில் காட்ட வேண்டும்.

அமைச்சர் ராஜ்மோகன்: எங்களை நோக்கி, பைத்தியம் மாதிரி பேசுகின்றனர் என்கின்றனர். ஒருமையில் வாடா, போடா என்கின்றனர்; அடிக்க பாய்ந்தும் வருகின்றனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க., - நேரு: அமைச்சர் நிர்மல்குமார் சபையை கிளப்பி விடுகிறார். ஏன் எப்போதும் குரோதமாக பேசுகிறீர்கள். அப்புறம் நான் எதாவது சொன்னால் வருத்தப்படுவீர்கள்.

அமைச்சர் நிர்மல்குமார்: யாரும் குதர்க்கமாக பேசவில்லை. காவிரி விவகாரத்தில், இந்த சபையில் நடந்த விவாதத்தைதான் சொன்னேன்.

நேரு: அமைச்சர்கள் அநாகரிகமாக பேசாதீர்கள். காவிரி பிரச்னையில், பிரதமர் அழைத்து சமாதனம் செய்து வைக்கிறேன் என கூறும்போது, சுமுகமாக முடியும் என, அதை கேட்க வேண்டிய நிலை வந்தது.

அமைச்சர் நிர்மல்குமார்: மத்திய அரசுக்கு ஆதரவாக வழக்கை வாபஸ் பெற்றனர் என்பதுதான் குற்றச்சாட்டே. அதனால்தான், 40 ஆண்டுகள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us