sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

இலவு காத்த கிளி! 15 ஆண்டாக சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டம்..

/

இலவு காத்த கிளி! 15 ஆண்டாக சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டம்..

இலவு காத்த கிளி! 15 ஆண்டாக சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டம்..

இலவு காத்த கிளி! 15 ஆண்டாக சென்னை - கடலுார் ரயில் பாதை திட்டம்..


UPDATED : ஜன 24, 2025 05:53 AM

ADDED : ஜன 24, 2025 01:01 AM

Google News

UPDATED : ஜன 24, 2025 05:53 AM ADDED : ஜன 24, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்: சென்னை - கடலுார் இடையே, 523 கோடி ரூபாயிலான கடலோர ரயில் பாதை திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று தெரியாமல், 'இளவு காத்த கிளி போல்' 15 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். முதற்கட்டமாக, மாமல்லபுரம் - செங்கல்பட்டு இடையே மட்டுமாவது, ரயில்பாதையை அமைக்க வேண்டுமென, பயணியரிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமாக மாமல்லபுரம் உள்ளது. இங்குள்ள பல்லவர் கால சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றது. இந்த சுற்றுலா பகுதிக்கு, தற்போது சாலை போக்குவரத்து மட்டுமே உள்ளது. இங்கு, ரயில் போக்குவரத்தும் அவசியமாகிறது. பரிசீலித்த ரயில்வே நிர்வாகம், சென்னை -- கடலுார் இடையே, 180 கி.மீ., துாரம், கடலோர ரயில் பாதை அமைக்க முடிவெடுத்தது. இத்திட்டத்திற்கு ரயில்வே நிர்வாகம், கடந்த 2007ல் ஒப்புதல் அளித்தது.

அதைத்தொடர்ந்து, 523.50 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும் என, 2008 - 09ல் மத்திய அரசு அறிவித்தது. கள ஆய்விற்காக, 6.66 கோடி ரூபாயும் ஒதுக்கியது.

வழித்தடம்


சென்னை, பெருங்குடியில் உள்ள மேம்பால ரயில் பாதையில் இருந்து, புதிய தரைமட்ட ரயில் பாதையை துவக்கி, மாமல்லபுரம் வழியாக கடலுாருக்கு அமைக்க, முதலில் திட்டமிடப்பட்டது. வருவாய் கருதி, சரக்கு ரயில் இயக்கவும் பரிசீலிக்கப்பட்டது.

இதுகுறித்த ஆய்வில், சரக்கு ரயில் இயக்கம் சாத்தியமற்றதாக கண்டறியப்பட்டதால், திட்டம் தவிர்க்கப்பட்டது. மாற்று திட்டமாக, தற்போதைய சென்னை - கன்னியாகுமரி பாதையில், செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக, கடலுாருக்கு ரயில் பாதை அமைக்க, நிர்வாகம் முடிவெடுத்தது.இப்பாதைக்கு நிலம் கையகப்படுத்த, மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, புதுச்சேரி சாலையின் மேற்கில், 100 - -300 மீட்டருக்குள் அளவிட்டு, கடந்த 2011ல் கற்கள் நடப்பட்டன. மாமல்லபுரம் -- செங்கல்பட்டு இடையே, செங்கல்பட்டு சாலையின் மேற்கில் அளவிட்டும் கற்கள் நடப்பட்டன.

Image 1372789


ரூ.1,000 மட்டுமே


ஆனால், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நாளடைவில் விவசாய நிலங்களில் நடப்பட்ட கற்கள், அதன் உரிமையாளர்களே ஆங்காங்கே அகற்றிவிட்டனர். தற்போது, நீண்ட காலமாக முன்னேற்றமின்றி, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முழு நீள பாதைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டிய சிக்கலால், இத்திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதாக கூறப்பட்டது. பயணியர் வலியுறுத்தலை தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதாக, மத்திய அரசு மீண்டும் அறிவித்தது.

Image 1372790
முதலில் 50 கோடி ரூபாய், பின் 25 கோடி ரூபாய் என, நிதி ஒதுக்கியது. கடந்தாண்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளதை குறிக்கும் வகையில், வெறும், 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. தொலை துார பாதைக்கே, பல்லாயிரம் கோடி ரூபாயும், படிப்படியாக நிதி ஒதுக்க கால அவகாசமும் தேவைப்படும். இதனால் தாமதம் ஏற்படும். ஆனால், கடலோர புதிய ரயில் பாதையில், செங்கல்பட்டு -- மாமல்லபுரம் இடையே, 26 கி.மீ., குறுகிய துாரமே உள்ளது.

மாநில இணைப்பு


திட்டத்தின் துவக்கமாக, இப்பகுதிக்கு முதலில் ரயில் பாதை அமைத்து, போக்குவரத்து துவக்கலாம். சென்னை -- கன்னியாகுமரி ரயில் பாதையில், செங்கல்பட்டு முக்கிய சந்திப்பாக உள்ளது. மாமல்லபுரம் - செங்கல்பட்டு ரயில் பாதை அமைக்கப்பட்டால், தமிழக தெற்கு, மேற்கு ஆகிய மாவட்டங்கள், கேரள மாநில பகுதிகள், விழுப்புரம், திருச்சி வழியாக இணைக்கப்படும்.

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக, அரக்கோணத்திற்கு ஏற்கனவே ரயில் பாதை உள்ளதால், மாமல்லபுரத்துடன் ஆந்திரா, கர்நாடகா, பிற வடமாநிலங்களும் இணைக்கப்படும். செங்கல்பட்டு -- மாமல்லபுரம் பாதை அமைந்தால், மாமல்லபுரத்தில் இருந்து தொலைதுார ரயில்கள், சென்னை கடற்கரை, தாம்பரம் -- மாமல்லபுரம் இடையில், மின்சார ரயில்கள் இயக்கலாம்.

எனவே, போக்குவரத்து முக்கியத்துவம் கருதி, மாமல்லபுரம் -- செங்கல்பட்டு இடையே முதற் கட்ட ரயில் பாதையை அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வரைபடம் உண்டு



சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, சாலை போக்குவரத்து தான் உள்ளது. ரயில் போக்குவரத்து இல்லை. மெட்ரோ ரயில் திட்டமும் சிறுசேரி வரையே செயல்படுத்தப்படுகிறது. மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணியர் அதிகரிப்பதால், ரயில் போக்குவரத்து இன்றியமையாததாக உள்ளது.அணுசக்தி மின்சாரம் தயாரிக்கும் கல்பாக்கம் அருகில் தான் உள்ளது. இப்பகுதிகள் போக்குவரத்து வளர்ச்சிக்காக, செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்திற்கு, புதிய ரயில்பாதை அமைக்கவேண்டும். இதற்கு, வரும் பட்ஜெட்டில், முழு நிதியும் ஒதுக்கவேண்டும்.

- சுற்றுலா ஆர்வலர்கள், மாமல்லபுரம்.






      Dinamalar
      Follow us