தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/செக் பவுன்ஸ் வழக்கு; சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

செக் பவுன்ஸ் வழக்கு; சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

செக் பவுன்ஸ் வழக்கு; சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு


ADDED : நவ 29, 2025 01:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டில்லி சிறப்பு நிருபர்


'செக் பவுன்ஸ் தொடர்பான வழக்குகளை, புகார் அளித்தவரின் வங்கி கிளை அமைந்துள்ள நீதிமன்ற அதிகார வரம்புக்குள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்' என, சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.

செக் பவுன்ஸ் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 1881ன் கீழ், செக் பவுன்ஸ் வழக்குகள் எவ்வாறு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

இந்த சட்டத்தின் பிரிவு, 138ன்படி வங்கி கணக்கில் போதிய நிதி இல்லாமல் இருக்கும் போது தான், குறிப்பிட்ட காசோலை திருப்பி அனுப்பப்படுகிறது. எனவே, இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், குறிப்பிட்ட அந்த வங்கி எந்த பகுதியில் இருக்கிறதோ அந்த பகுதிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 'குறிப்பாக பிரிவு, 138ன் கீழ் தாக்கல் செய்யப்படும் புகாரை விசாரிக்கும் அதிகார வரம்பு, பணம் பெறுபவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையின் அதிகார வரம்புக்குள் உள்ள நீதிமன்றத்திற்கு உரியது. 'இது தொடர்பாக, மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 2015ன் திருத்த சட்டத்தில் விதிமுறைகள் இதன் மூலம் தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us