தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/வெற்றியை வாரி வழங்கிய முதல்வர் விஜய்யின் 'ஸ்டார்ட் அப் பார்முலா'

வெற்றியை வாரி வழங்கிய முதல்வர் விஜய்யின் 'ஸ்டார்ட் அப் பார்முலா'

வெற்றியை வாரி வழங்கிய முதல்வர் விஜய்யின் 'ஸ்டார்ட் அப் பார்முலா'


UPDATED : மே 18, 2026 05:34 AM

ADDED : மே 18, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 05:34 AM ADDED : மே 18, 2026 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு, வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

'விஜய் ஒரு சிறந்த ஸ்டார்ட் அப் தலைவர்' என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் பாராட்டுமளவுக்கு, தேர்தலில் விஜய் பின்பற்றிய உத்தி ஆழமாக விவாதிக்கப்படுகிறது.

கோவையில் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. அவர்கள், விஜய்யின் வெற்றியை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான பார்முலாவாக தொகுத்து விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பரப்பி வரும் பதிவு:

* நாம் அறிமுகப்படுத்தும் பொருளுக்கான கூட்டத்தை முன்பே திரட்ட வேண்டும் (விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தினார்).

* மக்களிடம் எது ஏமாற்றமாக உள்ளதோ, அந்த குறையை போக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

* ஒருபோதும் போட்டியாளர்களை மட்டுமே எதிர்க்கக் கூடாது. ஏமாற்றத்தில் இருந்து மாற்றம் கொடுக்கும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும்.

* எந்த தருணத்திலும் தள ராமல் உறுதியுடன் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.

* தெளிவாக செயல்பட்டால் வெளியில் எவ்வளவு இரைச்சல்கள் இருந்தாலும் பின்னடைவு ஏற்படாது.

* சமூகம் தான் சிறந்த விநியோக சங்கிலி (ரசிகர் மன்றங்கள் விஜய்யின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன).

* சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இதையெல்லாம் சரியாக செய்து, கடைசியில் மக்களிடம் தெளிவாக பேசினால் வெற்றி நம் வசமாகும்.

இவ்வாறு, அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us