தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/காங்கிரஸ் அறக்கட்டளை பதவி: செல்வப்பெருந்தகையை நீக்க முயற்சி

காங்கிரஸ் அறக்கட்டளை பதவி: செல்வப்பெருந்தகையை நீக்க முயற்சி

காங்கிரஸ் அறக்கட்டளை பதவி: செல்வப்பெருந்தகையை நீக்க முயற்சி

3


ADDED : அக் 19, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : அக் 19, 2026 05:44 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினராக இருந்த, முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மறைந்து விட்டதால், புதிய உறுப்பினரை நியமிக்க, தமிழக காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், அறக்கட்டளையின் ஆயுட்கால உறுப்பினராக உள்ள செல்வப்பெருந்தகையின் பதவியை பறிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழக காங்ககிரஸ் அறக்கட்டளைக்கு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம், அதன் அருகேயுள்ள, 181 கிரவுண்ட் மைதானம் மற்றும் சத்தியமூர்த்தி பவன் கட்டடம் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் உள்ளன.

கடந்த, 1996ம் ஆண்டில், காங்கிரஸ் மைதானத்தை மேம்படுத்துவது தொடர்பாக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. பின், நிலத்தின் மீது தங்களுக்கு உரிமை கோரி, தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது; முடிவில், தனியார் நிறுவனத்தின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்பின், காங்கிரஸ் அறக்கட்டளை பணத்தை எடுத்தும், டில்லி மேலிடத்திடம் கடன் வாங்கியும், அந்த தனியார் நிறுவனத்திடம் பெற்ற தொகையை செலுத்தி, அந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. செல்வப்பெருந்தகை மாநில தலைவராக இருந்த போது தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுவாக, தமிழக காங்., மாநில தலைவராக நியமிக்கப்படுபவர், அறக்கட்டளை உறுப்பினராக செயல்படுவார். தலைவர் பதவி பறிபோய் விட்டால், அறக்கட்டளை உறுப்பினர் பதவியும் தானாகவே காலவாதியாகி விடும்.

ஆனால், செல்வப்பெருந்தகை மட்டும் ஆயுட்கால உறுப்பினர் என்ற புதிய பதவியை ஏற்படுத்தி, அதில் அமர்ந்து கொண்டார். அதேபோல, காங்., - எம்.பி., சசிகாந்த் செந்திலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியானது. அவரை யாரும் நியமிக்கவில்லை என்ற மற்றொரு தகவலும் வெளியானது.

இந்நிலையில், அறக்கட்டளை உறுப்பினராக இருந்த சுதர்சன நாச்சியப்பன் மறைந்து விட்டதால், அவர் வகித்த உறுப்பினர் பதவிக்கு, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிலரும், சட்டசபை காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் எம்.பி.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களும், அப்பதவியை பெற முயற்சிக்கின்றனர்.

இதற்கிடையில், ஆயுட்கால உறுப்பினராக செல்வப்பெருந்தகை இருப்பதை, தமிழக காங்கிரஸ் ல நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. அவர்கள் டில்லி மேலிட தலைவர்களிடம், இதுபற்றி பேசி வருகின்றனர்.

'முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர் போன்றவர்கள் யாரும், தற்போது அறக்கட்டளை உறுப்பினராக இல்லை. அப்படியிருக்கும் போது, செல்வப்பெருந்தகையை மட்டும் ஆயுட்கால உறுப்பினராக நியமனம் செய்திருப்பது அநியாயம்' என, அவர்கள் கொந்தளிக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரை ஆயுட்கால உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் முயற்சியில், தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us