sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா தேசிய தலைவர் படம் போடாததால் சர்ச்சை

/

காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா தேசிய தலைவர் படம் போடாததால் சர்ச்சை

காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா தேசிய தலைவர் படம் போடாததால் சர்ச்சை

காங்., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா தேசிய தலைவர் படம் போடாததால் சர்ச்சை

2


UPDATED : ஜூலை 15, 2025 10:34 AM

ADDED : ஜூலை 15, 2025 02:05 AM

Google News

UPDATED : ஜூலை 15, 2025 10:34 AM ADDED : ஜூலை 15, 2025 02:05 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா சைதாப்பேட்டையில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

மாவட்ட தலைவர் முத்தழகன் தலைமை வகித்தார். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று, கிராம கமிட்டி உறுப்பினர், அடையாள அட்டைகளை வழங்கினார்.

செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் நடத்திய விழாவிற்கு, தமிழக சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமாரை அழைக்கவில்லை. இதனால், அவர் அதிருப்தி அடைந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், விருதுநகர் லோக்சபா தொகுதி விழாக்குழு சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா விருதுநகரில் இன்று நடக்க உள்ளது.

இந்த விழாவில், விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர் பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு, காமராஜர் விருது வழங்க உள்ளார்.

விழாவிற்கான அழைப்பிதழில், கட்சியின் தேசிய தலைவர் கார்கே, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பெயர், புகைப்படம் இடம் பெறவில்லை.

இது, செல்வப்பெருந்தகை ஆதரவாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, காங்., பிற்படுத்தப்பட்டோர் அணியின் துணை தலைவர் ரவிராஜ் கூறுகையில், “மாணிக்கம் தாகூர், சுயேச்சையாக போட்டியிட்டால் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற முடியுமா? கட்சியின் அகில இந்திய தலைவர், மாநில தலைவர் புகைப்படத்தை புறக்கணித்தது கண்டனத்துக்குரியது,” என்றார்.

விஜய்க்கு பதிலடி


தமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராஜேஷ்குமார், வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கும் கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். சில எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., அதிக சீட் தர மறுத்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, கட்சி மேலிடத்தை வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், விஜய்க்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்துக்குப் பின், தி.மு.க.,வுக்கு எதிராக விஜய் பேசியது குறித்து செல்வப்பெருந்தகையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையாக வருத்தம் தெரிவித்துள்ளார். அஜித்குமார் தாயாரிடம் மொபைல் போனில் பேசி ஆறுதல் கூறினார். அஜித்குமார் தம்பிக்கு வேலை வழங்கி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையெல்லாம் வரவேற்க வேண்டுமே தவிர, அரசியல் காழ்ப்புணர்ச்சியில் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us