UPDATED : ஜூலை 24, 2025 04:20 AM
ADDED : ஜூலை 24, 2025 02:18 AM

கூட்டணி ஆட்சிக்கு அ.தி.மு.,க., சம்மதிக்காவிட்டால், தனித்து போட்டியிடவும், எடப்பாடி சட்டசபைத் தொகுதியில் களமிறங்கவும், பா.ம.க., தலைவர் அன்புமணி ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'ஆட்சியில் பங்கு தர வேண்டும்; 4 அமைச்சர் பதவிகள் தர வேண்டும்; ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 35 தொகுதிகள் வேண்டும்' என, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., தலைவர் அன்புமணி தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு, பழனிசாமி தரப்பு எந்த முடிவும் சொல்லவில்லை. ராமதாஸ் - அன்புமணி மோதல் போக்கு முடிந்த பின் பார்க்கலாம் என, பழனிசாமி காத்திருக்கிறார்.
அன்புமணியின் கூட்டணி ஆட்சிக்கான உடன்பாட்டை பழனிசாமி ஏற்கவில்லை என்றால், தனித்து போட்டியிடுவது குறித்து, அன்புமணி தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்துள்ளார். வட மாவட்டங்களில், வன்னியர் அடர்த்தியாக உள்ள தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்றும், அன்புமணி கருதுகிறார்.
மேலும், சேலம் மாவட்டம், பென்னாகரம் தொகுதியில், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அன்புமணி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடும் நிலைமை ஏற்பட்டால், பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியில், 60 சதவீதம் வன்னியர் இருப்பதால், அங்கு களமிறங்க அன்புமணி ஆலோசித்து வருகிறார்.