தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/விஜய் மாநாட்டிற்கு 17 நிபந்தனைகள்: கட் அவுட், பேனர்கள் வைக்கவும் தடை

விஜய் மாநாட்டிற்கு 17 நிபந்தனைகள்: கட் அவுட், பேனர்கள் வைக்கவும் தடை

விஜய் மாநாட்டிற்கு 17 நிபந்தனைகள்: கட் அவுட், பேனர்கள் வைக்கவும் தடை


ADDED : செப் 27, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2024 05:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு, கட் அவுட், பேனர்கள் வைக்க தடை உள்ளிட்ட, 17 நிபந்தனைகளை போலீசார் விதித்து உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், அக்., 27ல், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார். இதற்காக, போலீஸ் அனுமதி பெறப்பட்டது. மாநாடு நடத்துவதற்கு 17 நிபந்தனைகளை, விழுப்புரம் மாவட்ட போலீசார் விதித்துள்ளனர்.

முக்கிய விதிகள்


* போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது

* மாநாட்டு விளம்பர பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக்கூடாது

* முதியோர், கர்ப்பிணியர், பெண்களுக்கு பாதுகாப்பான இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும்

* மாநாட்டு திடலில் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை நிறுத்த வேண்டும்

* மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்

* முக்கிய பிரமுகர்கள் மாநாட்டிற்கு வந்து செல்ல, தனிவழி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவை உள்ளிட்ட 17 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதேபோல, மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, எட்டு நிபந்தனைகளையும் விஜய் விதித்துள்ளார். மது அருந்தி மாநாட்டிற்கு வரக்கூடாது; போலீசார், அதிகாரிகளை மதித்து நடக்க வேண்டும்; மாநாட்டு திடலை ஒட்டியுள்ள கிணறுகளுக்கு அருகில் செல்லக்கூடாது என்பது, அதில் முக்கியமானவை.

வேட்டி, சட்டை அணிந்து வர உத்தரவு:


இதனிடையே, மாநாடு ஏற்பாடு தொடர்பாக, கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். மாநாட்டிற்கு வரும் முக்கிய நிர்வாகிகள், வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வரவேண்டும் என, ஆலோசனை கூட்டத்துக்குப் பின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us